
சமுதாய தலைவர்கள் கூட, தங்களை சந்திக்க வரவில்லையே என ஆதங்கத்தில் இருக்கிறார் சிறை வாழ்க்கையை அனுபவித்து விடுதலையாகியுள்ள சசிகலா.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு சமீபத்தில் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்காக டாக்டர் சேதுராமனின், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், இசக்கிமுத்துவின், பசும்பொன் மக்கள் கழகம் ஆகிய இரு கட்சிகள் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தனித்தனியே வாழ்த்து கடிதங்கள் அனுப்பி இருக்கிறார்கள்.
சிறை மீண்டபின் முக்குலத்தோர் சமுதாய கட்சிகள் சசிகலா பின்னால் அணிவகுத்து வரும் என கணக்கு போட்ட அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தரப்பு, இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறது. அந்த சமுதாய தலைவர்கள் யாரும், சசிகலாவை சந்திக்க வராததும், அவருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அருகில் இருந்து உண்ர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், முதலில் உங்கள் சொந்த பந்தங்களை ஒன்று சேருங்கள். அடுத்து சமுதாயத்தை எதிர்பாருங்கள் என நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.
கூடப்பிறந்த சோகதரரான சுதாகரனை வெளியில் கொண்டு வர இவர்களுக்கு மனது இல்லை. இவர்களை நம்பி போனால் நமது நிலைமை என்னவாகும் என யோசிக்கிறார்களாம் அவர்களது சமுதாயத்தை சேர்ந்த சாதிக் கட்சித் தலைவர்கள். அதிமுக அமைச்சர்கள் மத்தியிலும் சுதாகரனை நிராகரித்தது நித்திரையிலும் ஞாபகமாக வருவதாக புலம்புகிறார்கள்.