கட்சி காரர்களிடம் பணத்தை பிடுங்கி திண்ணும் டீம் தான் பிரசாந்த் கிஷோர் டீம்.. கழுவி ஊற்றிய அமைச்சர் ஜெயக்குமார்

By Ezhilarasan BabuFirst Published Feb 19, 2021, 1:59 PM IST
Highlights

மேலும், திமுக சமூக நீதிக்கு எதிரான கட்சி என்று குற்றம்சாட்டிய அவர், ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்ற நீதிபதிகளையே ஆதிதிராவிடர் மக்கள் நீதிபதிகளாக இருப்பது நாங்கள் போட்ட பிச்சை என்று கொச்சைப்படுத்தியதாகவும்,  

ராயபுரம் தொகுதியில் திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள் நின்றாலும், கீழ் மட்ட தொண்டர்கள் நின்றாலும் வெற்றி பெற போவது அதிமுக தான் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்பட கூறியுள்ளார். 

தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பூரண மது விலக்கு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே அதிமுக அரசின் நிலைப்பாடு என்றும், படிபடியாக செயல்படுத்தி வருவதாக கூறினார். 

மேலும், திமுக சமூக நீதிக்கு எதிரான கட்சி என்று குற்றம்சாட்டிய அவர், ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்ற நீதிபதிகளையே ஆதிதிராவிடர் மக்கள் நீதிபதிகளாக இருப்பது நாங்கள் போட்ட பிச்சை என்று கொச்சைப்படுத்தியதாகவும், இதற்கு வரும் தேர்தலில் மக்கள் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார். ராயபுரம் தொகுதியில் திமுக போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திமுகவிற்கு சரியாக நீச்சல் தெரியாது என்றும், நீச்சல் தெரியாமல் நீந்தினால் மூச்சு பேச்சு இல்லாமல் தான் வருவார்கள் எனவும் விமர்சனம் செய்தார். 

இந்த முறை காங்கிரசுக்கு ராயபுரத்தில்  சீட் இல்லை எனவும், திமுகவே நேரடியாக போட்டிபோடப்போகிறதாமே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு ராயபுரம் தொகுதியில் சீட் இல்லை என்று எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பிய அவர், கட்சி தான் இதுக்குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், ராயபுரம் தொகுதியில் திமுக டெபாசிட் கூட வாங்க முடியாது எனவும், திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள் நின்றாலும், கீழ் மட்ட தொண்டர்கள் நின்றாலும் வெற்றி பெற போவது அதிமுக தான் என்றும் உறுதிப்பட கூறினார்.கட்சி காரர்களிடம் பணத்தை புடுங்கி திண்ணும் டீம் தான் பிரசாந்த் கிஷோர் டீம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.
 

click me!