இரவோடு இரவாக, ஜெயக்குமாரை கைலி கூட மாற்ற விடாமல் அப்போது சுந்தரவதனம் கைது செய்து அழைத்து வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தன்னை கைது செய்த போது அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், மனித உரிமை மீறப்பட்டதாக கூறி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு ஜெயக்குமார் டெல்லிக்கு பரபரப்பு கடிதம் எழுதினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரி திடீரென இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தவித்து தமிழ்நாடு முழுவதும் 7 மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர், திண்டுக்கல், மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பகுதியில் உள்ள காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுக நிர்வாகியை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்கள் தாக்கினர். அவரது முன்னிலையிலேயே அந்த நபரை மேலாடை இன்றி அடித்து, அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமாரை இரவோடு இரவாக வண்ணாரப்பேட்டை காவல் துறை துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கைது செய்தனர்.
இரவோடு இரவாக, ஜெயக்குமாரை கைலி கூட மாற்ற விடாமல் அப்போது சுந்தரவதனம் கைது செய்து அழைத்து வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தன்னை கைது செய்த போது அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், மனித உரிமை மீறப்பட்டதாக கூறி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு ஜெயக்குமார் டெல்லிக்கு பரபரப்பு கடிதம் எழுதினார். இதில் மனித உரிமை மீறப்பட்டதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டிருந்தார். ஆனால், அப்போது அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தான் தற்போது வண்ணாரப்பேட்டை டிசியாக இருந்த சுந்தரவதனம் கரூர் எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.