வெளிமாநில தொழிலாளர்களுக்கான ரயில்கள் சேவை ரத்து.! காங்கிரஸ், பாஜக மீது கடும் தாக்கு.! பூசி மொழுகும் எடியூரப்பா

By Thiraviaraj RMFirst Published May 6, 2020, 7:44 PM IST
Highlights

கர்நாடகாவில் வெளிமாநில தொழிலாளர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் கடுமையாக குற்றம் சுமத்தியிருக்கிறது. 
 

T.Balamurukan

கர்நாடகாவில் வெளிமாநில தொழிலாளர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் கடுமையாக குற்றம் சுமத்தியிருக்கிறது. 

கர்நாடக முதல்வர் ரயில்களை ரத்து செய்வதற்கு முன்பாக கட்டிட தொழில் அதிபர்களை சந்தித்து பேசியதாகவும், அவர்கள் போதுமான தொழிலாளர்கள் இல்லை என்று தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.


இந்த விமர்சனத்திற்கு வலுசேர்க்கும் வகையில் முதல்வர் எடியூரப்பா, மாநிலத்திலேயே தங்கி பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வெளி மாநில தொழிலாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடகாவில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்காக 10ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவற்றை கர்நாடக அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடகாவில் வெளிமாநில தொழிலாளர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

முன்னதாக வெளிமாநில தொழிலாளர் நலன் அதிகாரி "மஞ்சுநாதா பிரசாத்" 
'தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். அதில், 'கர்நாடக அரசு சார்பாக நாள்தோறும் 2ரயில்கள் வீதம் 5 நாட்களுக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது ரயில்களின் சேவையை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வெளி மாநில தொழிலாளர்கள், பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வேலையின்மையால் ஊதியம் கிடைக்காமலும், பசி பட்டினியால் கொடுமைப்பட்ட அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்.கால்நடையாக, சைக்கிள் பயணம், திருட்டுத் தனமாக லாரிகளில் ஒளிந்து கொண்டு செல்வது போன்றவகளை செய்து, சொந்த மாநிலத்திற்கு அவர்கள் கிளம்பினர்.

 

click me!