போக்குவரத்து காவலர் மீது மின்னல் வேகத்தில் மோதிய லாரி..!! கடைமை தவறாத போலீசுக்கு கிடைத்த பரிசு..!!

By Ezhilarasan BabuFirst Published May 7, 2020, 5:01 PM IST
Highlights

நேற்றிரவும் இவர் அப்பகுதியில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக சென்னையிலிருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி சென்ற கொரியர் லாரி சோதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர் சேட்டு மீது மோதி விபத்துக்குள்ளானது. 

கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் கொரியர் லாரி மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிரிச்சையை ஏற்படுத்து உள்ளது.  ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒசூர் போக்குவரத்துத்துறை தலைமை காவலர் சேட்டு என்பவர் அப்பகுதியில் சென்ற கொரியர் லாரி மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஒசூர் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள கிருக்கன்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (54) இவர் ஒய்வு பெற்ற இராணுவவீரர். தற்போது ஒசூர்  போக்குவரத்து துறையில் ஒசூரில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாகவே ஒசூர் அருகே மாநில எல்லைப்பகுதியான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் இவர் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அதனைத்தொடர்ந்து நேற்றிரவும் இவர் அப்பகுதியில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக சென்னையிலிருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி சென்ற கொரியர் லாரி சோதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர் சேட்டு மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த காவலர் சேட்டுவிற்கு சந்திரா என்ற மனைவியும் 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஒசூர் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!