முன்கூட்டியே கிளம்பிய டிராக்டர்கள் பேரணி.. தடுப்புகளை தகர்த்து ஏறிந்த விவசாயிகள்.. டெல்லியில் பதற்றம்..!

By vinoth kumarFirst Published Jan 26, 2021, 10:35 AM IST
Highlights

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியை விசாயிகள் தொடங்கினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியை விசாயிகள் தொடங்கினர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர். 

இதனையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்தனர். குடியரசு தினத்தை சீர்குலைக்க கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் டிராக்டர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கினர்.

இதனையேற்ற விவசாய சங்கங்கள், குடியரசு தின விழா முடிந்த பிறகு பேரணி துவங்கப்படும் என அறிவித்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே 9 மணியளவில் சிங்கு எல்லையிலிருந்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். கஞ்சவாலா சொவுக் - ஆச்சண்டி எல்லை வரையில் பேரணி தொடங்கியது. டெல்லி - ஹரியானா எல்லைப்பகுதியான டிக்ரி பகுதியில் போலீசார் அமைத்த தடுப்புகளை தகர்த்து விவசாயிகள் பேரணியை நடத்தினர். குடியரசு தினத்தில் நாட்டின் தலைநகரில் கிட்டத்தட்ட 2 லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடந்துவருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

click me!