நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என நாடு முழுவதும் பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்திலேயே தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக திமுக பொருளாளர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்- அரசியல் கட்சிகள் தீவிரம்
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. மூன்றாவது முறையாக வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய திட்டமிட்டு உள்ளது. இதற்காக நாடு முழுவதும் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தேர்தல் பணியை தொடங்க ஏற்கனவே துரிதப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் மாநிலம் வாரியாக வெற்றி பெறவேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை பாஜக தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் கைப்பற்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
undefined
டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல்.?
அதே நேரத்தில் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருகிறது. ஏற்கனவே பீகார் மாநிலம் பாட்னாவில் 17 கட்சிகள் கொண்ட கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த வியூகங்கள் வகுக்கப்பட்டது. விரைவில் அடுத்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு நடத்தாமல் முன்கூட்டியே நடத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கொரட்டூரில் நடைபெற்றது இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் டி ஆர் பாலு, நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
திமுகவினரை அலர்ட் செய்யும் டிஆர் பாலு
எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் முன்பாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். எனவே யாரும் ஏமாந்து விட வேண்டாம். தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்காக தான் அமெரிக்காவில் இருந்து வந்த பிரதமர் மோடி அவசர, அவசரமாக போபால் சென்றது ஏனென்று கேள்வி எழுப்பினார். எனவே இதனை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலை முன் கூட்டி நடத்த வாய்ப்புள்ளது. அனேகமாக டிசம்பர் மாதமே நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். எனவே தற்போதே தேர்தல் களத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு அனைவரும் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்
ஊழல்.. திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடக்கிறது.! திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை !!