நான் கிளம்புறேன்..! கண்களில் வியர்க்க, ஸ்டாலினிடம் டி.ஆர்.பாலு சொன்ன அந்த வார்த்தை..! அண்ணா அறிவாலயத்தில் சோக கீதம்..!

By Selva KathirFirst Published Feb 3, 2020, 10:48 AM IST
Highlights

திமுக பொருளாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் வசம் இருந்த தலைமை நிலையச் செயலாளர் பதவி டி-ஆர்.பாலுவிடம் கொடுக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் தலைமை நிலையச் செயலாளர் பதவிக்கு என்று தனி அறை உண்டு. இதனால் திமுக நிர்வாகிகள் பலருக்கும் அந்த பதவி மீது ஒரு வித ஏக்கம் உண்டு. அப்படிப்பட்ட பதவி  கிடைத்தது முதல் திமுகவின் டாப் 5 தலைவர்களுக்குள் ஒருவராக டி.ஆர்.பாலு அங்கீகரிக்கப்பட்டார்.

திமுக தலைமை நிலையச் செயலாளராக கே.என்.நேரு பதவி ஏற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.ஆர்.பாலு ஓரமாக ஒதுங்கி நின்றதுடன் பாதியிலேயே அங்கிருந்து சோகமாக புறப்பட்டுச் சென்றார்.

திமுக பொருளாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் வசம் இருந்த தலைமை நிலையச் செயலாளர் பதவி டி-ஆர்.பாலுவிடம் கொடுக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் தலைமை நிலையச் செயலாளர் பதவிக்கு என்று தனி அறை உண்டு. இதனால் திமுக நிர்வாகிகள் பலருக்கும் அந்த பதவி மீது ஒரு வித ஏக்கம் உண்டு. அப்படிப்பட்ட பதவி  கிடைத்தது முதல் திமுகவின் டாப் 5 தலைவர்களுக்குள் ஒருவராக டி.ஆர்.பாலு அங்கீகரிக்கப்பட்டார்.

மேலும் திமுக நாடாளுமன்ற குழு தலைவராகவும் டி.ஆர்.பாலு பதவியில் அமர்த்தப்பட்டார். ஒரு கட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனசாட்சி போல் டெல்லியில் செயல்பட்டு வந்தார். ஆனால் டெல்லி அரசியல் விவகாரங்களில் பாலுவின் தலையீடு ஸ்டாலின் மருமகன் சபரீசனின் அரசியலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் ஏற்பட்ட டென்சனில் தான் பாலுவின் முக்கியத்துவத்தை திமுக மேலிடம் குறைத்தது.

பதவியில் இருந்து நீக்கப்பட்டது முதலே வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்தார் டி.ஆர்.பாலு. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திமுக மேலிடம் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னரே அதற்கு எதிராக டி.ஆர்.பாலு பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது போன்ற தனி ஆவர்த்தனங்களால் தான் டி.ஆர்.பாலுவை ஸ்டாலின் ஓரம்கட்டினார். ஆனால் அவர் அடங்கியபாடில்லை என்கிற பேச்சுகள் எழுந்தன.

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கே.என்.நேரு தலைமை நிலையச் செயலாளராக பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. ஸ்டாலின், துரைமுருகன் முன்னின்று நேருவை அழைத்துச் சென்று தலைமை நிலையச் செயலாளர் சேரில் அமர வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த டி.ஆர்.பாலு மிகவும் இருண்ட முகத்துடன் காணப்பட்டார். தன்னுடைய எதிர்ப்பை காட்டவோ எண்ணவோ கருப்பு நிறம் போன்று காணப்பட்ட உடையில் பாலு வந்திருந்தார்.

சேரில் கே.என்.நேரு அமர்ந்தது தான் தாமதம், உடனடியாக அங்கிருந்த ஸ்டாலினை அழைத்து நான் கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு பாலு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது பாலுவின் கண்களில் வியர்த்திருந்ததாக கூறி சிரிக்கிறார்கள் அவருக்கு எதிராக அரசியல் செய்த திமுக புள்ளிகள்.

click me!