சசிகலா புஷ்பாவை தொடர்ந்து வரிசை கட்டும் அதிமுக- திமுக பிரமுகர்கள்... பாஜகவின் அதிர வைக்கும் லிஸ்ட்..!

By Thiraviaraj RMFirst Published Feb 3, 2020, 9:45 AM IST
Highlights


சசிகலா புஷ்பா பாஜகவில் ஐக்கியமானதை தொடர்ந்து மேலும் முக்கிய விஐபிக்கள் அணிமாற தயாராகி வருவதாக அதிர்ச்சி கூறப்படுகிறது. 

சசிகலா புஷ்பா பாஜகவில் ஐக்கியமானதை தொடர்ந்து மேலும் முக்கிய விஐபிக்கள் அணிமாற தயாராகி வருவதாக அதிர்ச்சி கூறப்படுகிறது. 

தமிழகத்தில் பாஜகவை மலர வைத்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டி காவிப்பொடி தூவ ஆரம்பித்து இருக்கிறது பாஜக தலைமை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறது பாஜக. அதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதில் ஒன்று மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சிக்கு அழைத்து வரும் அஜெண்டாவும் முக்கியமானது. 

அப்படி விரிக்கப்பட்ட வலையில் ஏற்கெனவே சிக்கிவிட்டார் அதிமுக எம்.பி.,யாக இருந்த சசிகலா புஷ்பா. அவரைப்போலவே தமிழக அரசியலில் திராவிடக் கட்சி நிர்வாகிகளை அழைத்து வந்து அதிர்ச்சி கொடுக்கும் திட்டத்தில் தீவிரமாக வலைத்து வருகிறது.  தமிழகத்தில் பாஜகவை வலுவான கட்சியாக மாற்ற வேண்டும் அல்லது வலுவான கட்சி போன்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும்.

இதில் இரண்டாவது லகானை கையில் எடுத்திருக்கிறது பாஜக. அதில் முதல் முயற்சி சசிகலா புஷ்பாவை பாஜகவில் இணைத்தது.  அதிமுகவின் தற்போதைய எம்.பி. அதிமுக தலைமைக்கு எதிராக பல தருணங்களில் கொடி பிடித்தவர் இப்போது பாஜகவில் ஐக்கியமாகி இருக்கிறார். இவரை போலவே பல முக்கிய விஐபிக்கள், முன்னாள், இன்னாள் கழக பிரமுகர்கள் கடிதம் கொடுத்துவிட்டு காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் பல முக்கிய விஐபிக்கள் பாஜகவுக்கு தாவ காத்திருக்கிறார்கள். 

திமுகவில் உள்ள வழக்கறிஞர் ஒடுவர் பாஜக தலைமையிடம் சம்மதம் தெரிவித்து விட்டு காத்திருக்கிறார்.  காரணம் ஸ்டாலின் தலைமையை ஏற்க மறுத்தும், பதவி கிடைக்காத விரக்தியிலும் அவர் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். அண்மையில்கூட பட்ஜெட்டை பலரும் விமர்ச்சிக்க, இவர் மட்டும் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியதை பாராட்டி இருக்கிறார்.

அதை கண்ட பாஜகவினர் குஷியாகி விட்டனர். இதேபோல தென் மண்டலத்தில் அதிமுகவில் செல்வாக்காக இருந்த முக்கிய பிரமுகரும் கடும் அதிருப்தியில் இருப்பதோடு பாஜகவுக்கு தூதுவிட்டு கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதே போன்று அதிமுகவிலும் பலர் கடிதம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்களாம். திராவிட கட்சிகளின் முக்கிய புள்ளிகளை கட்சியில் இணைய வைக்கும் அதிர்ச்சி வைத்தியம் இனி அதிகமாகும் என்கின்றனர் பாஜகவினர். 

click me!