ஸ்டாலினை கைது செய்வாரா? சுவர் ஏறி குதித்த அமைச்சருக்கு என்ன பைத்தியமா? பங்கம் செய்த டி.ஆர்.பாலு..!

By vinoth kumarFirst Published Nov 29, 2020, 2:23 PM IST
Highlights

பொய்யான குற்றச்சாட்டை திமுக  தலைவர் ஸ்டாலினை கைது செய்ய முடியும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதற்கு  திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார்.

பொய்யான குற்றச்சாட்டை திமுக  தலைவர் ஸ்டாலினை கைது செய்ய முடியும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதற்கு  திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார்.

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழ் வளர்ச்சித்தறை அமைச்சர் பாண்டியராஜன் வரதராஜபுரம், மண்ணிவாக்கம் இடங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை திமுக  தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு கைது செய்யக்கூடிய குற்றமாகும் என ஆவேசமாக தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு டி.ஆர். பாலு பதிலடி கொடுத்துள்ளார். 

இந்நிலையில், செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் இதுபற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பாண்டியராஜன் என்றால் சினிமா நடிகர் பாண்டியராஜனா? என்று கேட்டார்.

தொடர்ந்து, கூவத்தூரில் காம்பவுண்டை எகிறி குதித்து வந்தவரா? என்று கேலி செய்தவர், யார் யாரைக் கைது செய்யச் சொல்வது என்ற நாகரீகமே இல்லாமல் போய்விட்டது . பாண்டியராஜன் எப்போது அரசியலுக்கு வந்தார்? எப்போது அமைச்சரானார்? எங்கள் தலைவர் எப்போது அரசியலுக்கு வந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். பேப்பர், டிவி எல்லாம் அமைச்சர் பார்ப்பது இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

click me!