5 பேரில் முதலிடம்... இந்தியாவிலேயே செல்வாக்கு பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Oct 21, 2021, 10:49 AM IST
Highlights

இந்தியாவில் செல்வாக்கு பெற்ற 5 முதலமைச்சர்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளதாக சி.என்.ஓ.எஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செல்வாக்கு பெற்ற 5 முதலமைச்சர்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளதாக சி.என்.ஓ.எஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல்வர்களின் செல்வாக்கு பற்றி சி.என்.ஓ.எஸ் ஒபினியோம்’ என்ற அமைப்பு நடத்திய சர்வே நாட்டில் சிறந்த முதலமைச்சர்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட ஐந்து முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வேயில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராகத் திகழ்கிறார். இந்த கணக்கெடுப்பில் அவர் பெற்றுள்ள நிகரப் புள்ளிகள் 67ஆகும். அவருடைய மாநிலத்தில் (தமிழ்நாட்டில்) கணக்கெடுப்பு நடத்தப்பட்டவர்களில் 79 சதவிகிதம் பேர் அவருடைய தலைமையில் திருப்தி அடைந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 12 சதவிகிதம் பேர் அவருடைய செயல்பாடு திருப்தி இல்லை என்று கூறியுள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பில் திருப்தி அடைந்தவர்களின் சதவிகிதத்தில் திருப்தி இல்லை என்று கூறுபவர்களைக் கழித்து மீதமுள்ளவர்களே நிகர ஆதரவாளர்களாகக் கணக்கிடப்படுகிறது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகரப் புள்ளிகள் 67 பெற்று இந்தியாவிலேயே தலைசிறந்த மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராக முதலிடம் பெற்றுள்ளார்.

அவரைத் தொடர்ந்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மக்கள் செல்வாக்கு பெற்ற சிறந்த முதலமைச்சர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அடுத்து உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 3வது இடம் பெற்றுள்ளார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 4வது இடத்திலும், அசாம் முதல் அமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா 5வது இடத்திலும் உள்ளனர். 

click me!