ஏக கெடுபிடி வளையத்துக்குள் வைத்திருக்கும் தினகரன்? எடப்பாடி அணிக்கு தாவ திட்டம்...

By sathish kFirst Published Oct 12, 2018, 3:15 PM IST
Highlights

”விஜய் அரசியலுக்கு வருவது அவரது உரிமை, அது அவரது உரிமை. ஏன் நாளைக்கு கோவைசரளா கூட ‘கலைச்சேவையில் என் தொண்டு முடிந்துவிட்டது இனி நான் மக்கள் சேவை செய்ய வருகிறேன்’ என்று சொல்லி கட்சி தொடங்கலாம். யாரும் தடுக்க முடியாது.” என்று இளைய தளபதியை எக்கச்சக்கமாக வம்புக்கிழுத்திருக்கிறார் தமிழக காங்கிரஸின் மாஜி தலைவர் இளங்கோவன். 

*    ”விஜய் அரசியலுக்கு வருவது அவரது உரிமை, அது அவரது உரிமை. ஏன் நாளைக்கு கோவைசரளா கூட ‘கலைச்சேவையில் என் தொண்டு முடிந்துவிட்டது இனி நான் மக்கள் சேவை செய்ய வருகிறேன்’ என்று சொல்லி கட்சி தொடங்கலாம். யாரும் தடுக்க முடியாது.” என்று இளைய தளபதியை எக்கச்சக்கமாக வம்புக்கிழுத்திருக்கிறார் தமிழக காங்கிரஸின் மாஜி தலைவர் இளங்கோவன். 

இது விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பைக் கிளப்பியுள்ளது. இணையத்தில் சிலர் ‘அப்படின்னா விஜய்யும், கோவை சரளாவும் ஒண்ணுதான். அதானே இளங்கோ சொல்றார்’ என்று ஊதி வைக்க பற்றி எரிகிறது நெருப்பு. நெட்டில் இளங்கோவனை தாறுமாறாக திட்டித் தீர்க்கும் விஜய்யின் ரசிகர்கள், இளங்கோவனின் மகன் திருமகனை பற்றிய பர்ஷனல் ரகசியங்களை வெளியிடுவோம்! என்று தொடைதட்டி வருகின்றனர். 

*    விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் மாஸ் ஹிட் கொடுத்த பழைய படத்துக்கு எப்படி ‘கதை திருட்டு’ பஞ்சாயத்து எழுந்ததோ அதேபோல் இப்போது ‘சர்க்கார்’ படத்துக்கும் எழுந்துள்ளது. உதவி இயக்குநர் ஒருவர் இதை கிளப்பியுள்ளார். இதை திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளார். புகாரை விசாரித்த சங்க தலைவர் கே.பாக்யராஜ் முருகதாஸை அழைத்து ‘அந்த தம்பி சரியான ஆதாரம் வெச்சிருக்கார். அதனால டைட்டிலில் பெயரை போட்டு, நஷ்ட ஈடு பணத்தையும் கொடுங்க.’ என்றாராம். ஆனால் முருகதாஸ் முடியாது என்று மறுத்துவிட்டாராம். இதனால் கோர்ட்டுக்கு செல்ல இருக்கிறார் அந்த பாதிக்கப்பட்ட இயக்குநர்.

*தன்னைப் பற்றி வரும் நக்கல் மீம்ஸுகளுக்கு எதிராக கொதித்துக் கொந்தளித்து, கமிஷனர் அலுவலகம் வரை சென்று புகார் கொடுப்பது விஜயகாந்தின் செயல். இப்போது ஸ்டாலின் மகன் உதயநிதியும் அதேவேலையை செய்ய முடிவெடுத்துள்ளார். 
சமீபத்தில் தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடை ஒன்றில் தான் பேசியபோது எடுக்கப்பட்ட போட்டோக்களை வைத்தும், தன் ட்விட்டர் பகுதியில் உள்ள போட்டோக்களை எடுத்தும் மீம்ஸ் போட்டு ஓவராய் கலாய்ப்பதாலேயே இந்த முடிவாம். 

* ஜெயலலிதாவின் ஆசி பெற்ற தலைமை செயலாளராக இருந்தவரும், குட்கா சர்ச்சையில் சிக்கியவருமான ராமமோகனராவ் ரஜினிகாந்த் துவக்க இருக்கும் கட்சியில் இணைய விரும்புகிறாராம். ஆனால் எப்பவோ சூப்பருக்கு தூது சொல்லியும் இதுவரையில் எந்த பலனுமில்லையாம். 

போன் மேல் போன் போட்டவர் ஓவராய் நொந்துவிட்டார். இப்போது பைபாஸ் ரூட்டில், ரஜினிக்கு நெருக்கமான ஒரு இயக்குநர் மூலமாக நெருங்கிவிட்டாராம். ஆனாலும் பதில் இல்லாததால் இயக்குநரே ரஜினி மேல் கோபத்தில் இருக்கிறாரம்.
அந்த ராவுக்கு, இந்தாளு ஏன் இவ்வளவு வக்காலத்து வாங்குறார்? என்பதுதான் ரஜினியின் டவுட்டு. 

* தனித்து செயல்பட துவங்கிய புதிதில் எல்லோரும் எளிதாய் அணுகக்கூடிய எளிமை மனிதராய் இருந்தார் தினகரன். ஆனால் இப்போது அவர் அப்படியில்லையாம். அவரது அணியிலிருக்கும் எம்.எல்.ஏ.க்களே அவரை சந்திக்கவும், பேசவும் படாதபாடு பட வேண்டியிருக்கிறதாம்.  மிகப்பெரிய தலைவர்கள் போல் ஏக கெடுபிடி வளையத்துக்குள் தினகரன் தன்னை வைத்துக் கொண்டுள்ளாராம்.  இதனால் அங்கிருந்து சில எடப்பாடி அணிக்கு எஸ்கேப் ஆனாலும் ஆச்சரியமில்லை! என்பதே லேட்டஸ்ட் தகவல்.

click me!