
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக முழு வீச்சில் உட்கட்சி எதிர்ப்பு அரசியலை துவக்கிவிட்டார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இதன் ஒரு நிலையாக தனது வலுவை காட்டிட, ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த மறைந்த நடிகர் சிவாஜியின் ரசிகர் மன்றங்களை தனக்கு ஆதரவு தரும்படி மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக சிவாஜியின் மகன் பிரபுவின் உதவியை நாடியுள்ளார்.
ஆனால் இதுவரையில் இந்த மன்றத்தினரை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவே வாக்களிக்க கண்சாடை காட்டிக் கொண்டிருந்த பிரபு, ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் தி.மு.க.வுக்கு ஆதரவு நிலைப்பாட்டினை எடுக்க உள்ளார் என்கிறார்கள்.
அய்யோ பாவம் ஈ.வி.கே.எஸ்.!
* ஓஸியாய் கிடைத்த மேடையை, ஈஸியாய் பயன்படுத்தி ‘நான் முதல்வரானால்!’ என்று கொளுத்திப் போட்டுவிட்டு தன் வேலையை பார்க்கப் போயிவிட்டார் நடிகர் விஜய். ஆனால் அவரது ரசிகர்களோ, அடுத்து நம்ம தலைவரும் அரசியலுக்கு வர்றாரு! என்று நம்பி மளமளவென களமிறங்கிவிட்டனர்.
அதற்குள் அவர்களுக்கு மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் யார்? யார்? என்பதில் பெரும் முட்டல் மோதல் துவங்கிவிட்டதாம்.
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் கைகலப்பாக மாறி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் கடைசியில் தலைமை தலையிட்டு அமைதியானார்களாம்.
* சமீபத்தில் பாலக்காடு மாவட்டத்தில் கைதான மாவோயிஸ்ட் டேனிஷை என்கொயரியில் ஸ்கேன் செய்தபோது, அவர் எடுத்து வைத்த தரவுகள் கியூ பிராஞ்ச் காவல்துறையையே அதிர வைத்துவிட்டதாம்.
’ஏன் மற்றவர்கள் போல் அமைதி வாழ்க்கை வாழாமல், காட்டுக்குள் கிடந்து போராடுகிறோம்? எந்தளவுக்கு சிவிலியன்களின் உரிமைகள் அதிகார மையங்களின் சர்வாதிகார நடவடிக்கையால் நசுக்கப்படுகிறது?’ என்று மணிக்கணக்காக பேசினாராம். கண்ணீர்விட்டனாரம் கியூ பிராஞ்ச் போலீஸே, பின் சுதாரித்துக் கொண்டு கடமையாற்ற துவங்கினார்களாம்.
*’திடீரென்று கவர்னர் ஏன் ஆளும் கட்சிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை எடுத்து விடுகிறார்? என்னமோ நடக்க இருப்பதாக தோன்றுகிறது. இந்த ஆட்சி நாடாளுமன்ற தேர்தலோடு முடிந்துவிடும்.’ என்று துரைமுருகன் கிளப்பியிருக்கும் பூடக யூகங்களுக்கு பப்ளிக் மத்தியில் செம்ம பரபரப்பு ரெஸ்பான்ஸாம்.
எனவே இந்த வைபரேஷனை அப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க! நம்மளை யாரும் அசைச்சுக்க முடியாது, அசைச்சுக்க முடியாது! என்று ஏற்றிவிட்டிருக்கிறார் ஸ்டாலின்.
துரை செம்ம ஹேப்பி!
* டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வருக்கு பவர் ப்ரோட்டாகால் படி தமிழகம் இல்லத்தில் உரிய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன் போட்டோவை வாட்ஸ் அப்பில் பார்த்துவிட்டு, அ.தி.மு.க. புள்ளி ஒருவர் ‘ஹும்! சிங்கம் மாதிரி அம்மா நின்ன இடத்துல இவரெல்லாம்! எல்லாம் கலிகாலம்.’என்று கட்சியின் சீனியர் புள்ளி ஒருவர் சற்று சப்தமாகவே சவுண்டுவிட்டாராம். இது அப்படியே எடப்பாடியாரின் காதுகளுக்கு சுடச்சுட பார்சலாகிவிட்டது.
விரைவில் பதவிக்கு வேட்டு! என தகவல்.