
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி, திமுகவினர் நாயிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டுறவு தேர்தலின்போது ஓட்டுப் பெட்டிகள் உடைப்பு, தேர்தல் ஆவணங்களுக்கு தீ வைப்பு, அதிகாரிகளைத் தாக்குவது போன்ற முறைகேடுகள் நடந்தன. இதனைக் கண்டித்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்துங்கள் என்று நாயிடம், திமுகவினர் மனுக் கொடுத்துள்ளனர்.
பின்னர், கூட்டுறவு சங்கத்தின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் கூடி, அங்கு அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதிமுகவினருக்கு, அதிகாரிகள் துணைப் போவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதன் பின்னர், அங்கு திரிந்து கொண்டிருந்த நாயிடம், கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.