பென்சன் வாங்குவதற்கு இப்படி எல்லாமா செய்வாங்க!!  கொல்கத்தா கொடூரம் ….

 
Published : Apr 06, 2018, 11:55 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
பென்சன் வாங்குவதற்கு இப்படி எல்லாமா செய்வாங்க!!  கொல்கத்தா கொடூரம் ….

சுருக்கம்

to get pension son hide his mothrs body in freezer

கொல்கத்தாவில் இறந்து போன தாயாரின் உடலை பதப்படுத்தி வைத்துக் கொண்டு மூன்று ஆண்டுகளாக பென்சன் தொகையை பெற்று வந்த தந்தை மற்றும் ககனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா எஸ்என் சட்டர்ஜி ரோட்டில் வசித்து வந்தவர்  சுபா பிரதா மஜூம்தார்.  இவரது தாய்  பினா மஜூம்தார். தந்தை கோபால் மஜூம்தார்.  தாய் பினா கடந்த 2015 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். பினா மஜூம்தார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்  என்பதால் அவருக்கு  தொடர்ந்து பென்சன் வந்து கொண்டிருந்தது. 

ஆனால் பினா மரணமடைந்ததால் பென்சன் கிடைப்பது நின்றுவிடும் என்பதை உணர்ந்த சுபா பிரதா மஜூம்தார் , தனது தாய் இறந்ததை யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டார். அதே நேரத்தில்  தாயின் உடலை வீட்டுக்கு கொண்ட வந்த அவர் பல்வேறு ரசாயன கலவைகளை பயன்படுத்தி பதப்படுத்தி வைத்து உள்ளார். அத்துடன் அவருடைய கைரேகையை பயன்படுத்தி மாதம் மாதம் பென்சனை பெற்றுள்ளார்.



அண்மையில் போலீசார்  சுபாபிரதா வீட்டில் சோதனை நடத்தி  அவரது தாயாரின் உடலை கைப்பற்றி உள்ளனர். பினா உடலில் இருந்து முக்கிய பாகங்களை எடுத்து விட்டு  சுபாபிரதா அந்த உடலை மம்மி போல் பதப்படுத்து வைத்து இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் சுபாபிரதா  தனது தாய் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்குரிய   சான்றிதழைப் பெற்று வைத்து இருந்து இருக்கிறார். வங்கியில் இருந்து  ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் பென்சன் தொகையை பெற்று வந்து உள்ளார்.

இதே போல் சுபா பிரதா மஜூம்தாரின் தந்தையும் அரசு ஊழியர் என்பதால் அவர்  இறந்து விட்டால் அவரது உடலையும் பதப்படுத்தும் வகையில்  ஏற்பாடுகள் செய்திருந்தார். இதையடுத்து தந்தை, மகன் இருவரைலயும் போலீசார் கைது செய்தனர். பென்சன் தொகையை வாங்குவதற்காக இப்படி எல்லாமா செய்வார்கள் என அப்பகுதி மக்கள் சுபா பிரதா மஜூம்தாரை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!