TN Local Body Elections 2022 : நீங்க ‘ஓட்டு’ போட முடியாது.. வானதிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் அதிகாரிகள் !!

By Raghupati R  |  First Published Feb 19, 2022, 9:50 AM IST

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. 

Latest Videos

undefined

மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. வாக்குப்பதிவு மையங்களில் இன்று நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

இதில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாக்களித்தார். வாக்களிப்பதற்கு முன்பு வானதி சீனிவாசனுக்கு தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி கொடுத்தனர். 

அது என்னவென்றால், டாடாபாத்தில் உள்ள காமராஜர் பள்ளிக்கு வானதி வாக்களிக்க சென்ற போது, அங்கு வாக்களிக்க முடியாது என அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வாக்குச்சாவடியில் இவரது பெயர் இல்லாததால், அதிகாரிகள் இவ்வாறு கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பிறகு அருகில் உள்ள மற்றொரு வாக்கு சாவடியில் தன்னுடைய வாக்கினை செலுத்தினார் வானதி சீனிவாசன்.

click me!