பாஜகவின் 9 வருட ஆட்சியே மிகப்பெரிய பேரிடர் தான் - அமைச்சர் உதயநிதி கிண்டல்

By Velmurugan s  |  First Published Dec 23, 2023, 3:19 PM IST

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்படும் நிலையில், பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியே மிக்பபெரிய பேரிடர்தான் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கினார். 

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாவடக்கம் தேவை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. தமிழக மக்கள் கொடுத்த வரிப்பணத்தை தான் நிவாரண நிதியாக வழங்குங்கள் என்று மரியாதையாக தான் கேட்கிறேன்.

பிரதமரின் விழாவால் தான் கடும் மழையிலும் ரயில் சிக்கியது - எம்.பி.வெங்கடேசன் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெய்த கனமழை, பாதிப்புகளை பேரிடராக அறிவிக்க மத்திய அரசு மறுக்கிறது. பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியே பெரிய பேரிடர் தான் அதனால் தான் இந்த பாதிப்பை பேரிடராக அறிவிக்க அரசு தயங்குவதாக ஒரு கருத்தை இணையத்தில் பார்த்தேன். பேரிடர் கால நடவடிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியலாக்க முயற்சிக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உன் தவறு, என் தவறு என குற்றச்சாட்டுகளை கூறி எதையும் அரசியலாக்க விரும்பவில்லை. புயல், வெள்ள பாதிப்பை உணர்ந்து தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி தர வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் முழு வீச்சில் மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன. வெள்ளத்தால் ஏரல் பேரூராட்சி மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

click me!