திறக்குறளை எழுதியது ஒளவையார்... திண்டுக்கல் சீனிவாசனின் அடுத்த சர்ச்சை..!

By Asianet TamilFirst Published Jan 3, 2021, 9:16 PM IST
Highlights

திறக்குறளை ஒப்புவித்து எழுதியது ஒளவையார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையானது.
 

தமிழக அமைச்சர்களில் அடிக்கடி உளறல்களாகப் பேசுவதில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தனி இடம் உண்டு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, “மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய்” என்று பேசி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதேபோல ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டிடிவி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ-க்களும் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று பேசி அதிரடித்தார்.

 
கடந்த வாரம் மினி கிளினிக் திறப்பு விழாவில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “இயேசு நாதரை சுட்ட கோட்சே வாரிசை பேசுவது போல தமிழக அரசை பேசி வருகிறார்கள்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினர். இந்நிலையில் இன்று நடைபெற்றஅதிமுக ஆலோசனை கூட்டத்தில், நல்லார் ஒருவர் என தொடங்கும் திறக்குறளை ஒளவையார் ஒப்புவித்து எழுதியதாக கூறினார் திண்டுக்கல் சீனிவாசன்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர், திருவள்ளுவர் என்று எடுத்துக்கொடுத்தார்கள். அதற்கு, “திருக்குறளை வள்ளுவர் எழுதினாரா?” எனக் கேட்டுவிட்டு, “இல்லை ஒளவையாரும் சொல்லி இருக்கிறார்.” என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

click me!