உள்ளாட்சி தேர்தல் களத்தில் எத்தனை பேர்..? வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Published : Sep 26, 2021, 07:20 PM IST
உள்ளாட்சி தேர்தல் களத்தில் எத்தனை பேர்..? வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

சுருக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் களத்தில் 79,433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் களத்தில் 79,433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்க இருக்கிறது. தென்காசி, விழுப்புரம், நெல்லை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந் நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளதாவது: மொத்தம் 79433 பேர், 23,998 பதவிகளுக்கு களத்தில் உள்ளனர்.

2981 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 14,571 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர் என்று தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!