TN Local Body Elections 2022: எனக்கு அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்.. உதய நிதி.

Published : Feb 19, 2022, 12:26 PM IST
TN Local Body Elections 2022: எனக்கு அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்.. உதய நிதி.

சுருக்கம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என அக்கட்சியில் மூத்த முன்னணி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை முதல்வர் ஸ்டாலின் அது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.

எனக்கு அமைச்சர் பதவி வழங்கலாமா என்பது  குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும் என சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் உதய நிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி,, பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சி களுக்கும் இந்த தேர்தல் நடைபெறுகிறது. 

மொத்தம் இரண்டரை கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.  1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,800 இடங்கள் பதட்டமானவை என போலீசார் கண்டறிந்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 122 வது வார்டில் எம்எல்ஏ வும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உதயநிதியுடன் உடன் வந்து சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் வாக்குப் பகுதி செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது: சட்டமன்ற தேர்தலை காட்டிலும் நகர் புற உள்ளாட்சி தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும். 

10 நாட்களாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன், நல்ல வரவேற்பு இருந்தது. வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வருக்கு தமிழக மக்கள் உரிய அங்கீகாரம் தருவர் என நம்புகிறோம். மேற்கு மண்டலத்தில் கண்டிப்பாக திமுகவிற்கு வெற்றி  வாய்ப்பு இருக்கும். திமுக பண விநியோகம் செய்வதாக வேலுமணி ஆதாரம் இல்லாமல் புகாரளித்துள்ளார். எனக்கு அமைச்சர் பதவி வழங்கலாமா என்பது  குறித்து ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர் பதவி கொடுத்தால் அப்போது அது பற்றி பேசிக் கொள்ளலாம். முடிவெடுக்க வேண்டியது தலைமைதான். இவ்வாறு அவர் கூறினார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என அக்கட்சியில் மூத்த முன்னணி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை முதல்வர் ஸ்டாலின் அது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். ஸ்டாலின் காணோளிகாட்டி மூலம் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் உதயநிதியே நேரடியா களத்திற்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில்தான் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு  தனக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும் என  கூறியுள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!