TN Local Body Elections 2022: அரசை முடக்க போவதாக சொல்வது வேடிக்கை.. அதிமுகவை கலாய்த்த பிடிஆர்.

Published : Feb 19, 2022, 12:54 PM IST
TN Local Body Elections 2022: அரசை முடக்க போவதாக சொல்வது வேடிக்கை.. அதிமுகவை கலாய்த்த பிடிஆர்.

சுருக்கம்

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் சாத்தியமில்லை, அடிப்படை அறிவு இல்லாமல் சொல்லப்படுகிற வாதம் ஆகும் .

முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக மாபெரும் வெற்றி அடையும் என நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமது வாக்கினை பதிவு செய்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், திமுக ஆட்சியையம்  தமிழக சட்டமன்றத்தை முடக்க போவதாக கூறிவரும் அதிமுகவினர் கூறிவருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயகத்திற்கு விரோதமாக சட்டமன்றத்திற்கு வராத 18  பேரை நீக்கி வைத்து விட்டு, கட்சிக்கு எதிர்த்து வாக்களித்த 12 பேரை சட்டத்திற்கு விரோதமாக மன்றத்திற்கு உள்ளே வைத்து விட்டு ஊழலுக்காக 5 வருடம் ஆட்சியில் நீடித்தவர்கள், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட  வெற்றி பெற்ற அரசை முடக்க போவதாக சொல்வது உளறுவது போல இருக்கிறது .

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் சாத்தியமில்லை, அடிப்படை அறிவு இல்லாமல் சொல்லப்படுகிற வாதம் ஆகும் . ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என்கிறார்கள். பத்திரப்பதிவில் மதுரையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது. கோவில் நிலத்தியிலேயே ஆக்கிரப்பு செய்து பதிந்த  நிகழ்வுகளும் நடைபெற்றது. அப்படி இருக்கும் போது மதுரையில் பத்திர பதிவிற்கு தகவல் பற்றாக்குறை உள்ள போது ஒரே   நாடு ஒரே பதிவு என்றால் உதாரணமாக குஜராத்தில் உள்ளவர்கள் மதுரையில் உள்ள கோவில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்தால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்க பதிலளித்த அவர் ? முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  திமுக மாபெரும் வெற்றி அடையும். திமுக வாக்குக்கு பணம்  கடுப்பதாக அதிமுக வருகிறதே என கேட்டதற்கு ? என்னைப் பொறுத்தவரை வாக்கிற்கு ஒரு ரூபாய் பணம் கூட கொடுக்காமல் வெற்றி பெற்றவன் என்பதை வெளிப்படையாய் சொல்லிவிட்டு செயல்படுபவன்.
 

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!