TN Local Body Election Result:வெற்றிக்கணக்கை தொடங்கிய இளையதளபதி.. விஜய் மக்கள் இயக்கம் முதல் வெற்றி.

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2022, 12:41 PM IST
Highlights

வருகின்றனர். மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளும் திமுகவை முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக பெருமளவில் பின்தங்கியே உள்ளது.  இந்நிலையில்தான் இலைமறைகாயாக, பட்டும் படாமல் அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜயின் விஜய் மக்கள் மன்றம் எந்த அளவுக்கு வெற்றி பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ள நிலையில், 

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதுக்கோட்டை நகராட்சிகள் 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.  இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த  கிராமபுற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 100க்கும்  மேற்பட்ட பதவிகளில் விஜய் மக்கள்  மன்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி கணக்கை விஜய் மக்கள் மன்றம் தொடங்கியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் போலவே எப்போது விஜய் அரசியலுக்கு வர விஜய் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது, தற்போது வரை வெளிப்படையாக இல்லாமல் இலைமறைக்காயக அரசியல் செய்து வருகிறார் விஜய். இந்நிலையில் கடந்த கிராமபுற ஊராட்சி மன்ற தேர்தலில் விஜயின் மக்கள் மன்றம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுடன் இளைய தளபதி விஜய் புகைப்படம் எடுத்து கொண்டார். அதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் விஜய் மக்கள் மன்றம் சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். 

இந்த வகையில் கடந்த 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஒரு சில இடங்களில் பண வினியோகம், பரிசுப் பொருட்கள் விநியோகம் போன்ற காரணங்களால் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு நேற்று அதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன, பின்னர் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காலை முதலே பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை போன்ற இடங்களிலும் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகின்றனர். மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளும் திமுகவை முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக பெருமளவில் பின்தங்கியே உள்ளது. 

இந்நிலையில்தான் இலைமறைகாயாக, பட்டும் படாமல் அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜயின் விஜய் மக்கள் மன்றம் எந்த அளவுக்கு வெற்றி பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை நகராட்சியில் 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் பர்வேஸ் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக களம் கண்டுள்ள விஜய் மக்கள் இயக்கம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் 4வது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ் 282 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது பெரிய அளவிலான வெற்றி இல்லை என்றாலும் கூட நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் விஜய் மக்கள் மன்றத்தில் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.
 

click me!