பள்ளிக்கூட மாணவனிடம் வீராப்பு காட்டிய அதிகாரிகள்...!

By Asianet TamilFirst Published Aug 14, 2019, 11:52 AM IST
Highlights

அரசு பள்ளிகளில் மாணவர்கள் இல்லை அப்பள்ளிகளை மூடி நூலகங்களாக மாற்றிவருவது வேதனையளிக்கின்றது.படிப்பறிவு இருந்தால் மட்டுமே நூலகம் பயன்படும். கண்களை பிடுங்கிவிட்டு கண்ணாடி வழங்கும் முயற்சியாக உள்ளது

அரசு பள்ளிகளில் மாணவர்கள் இல்லை அப்பள்ளிகளை மூடி நூலகங்களாக மாற்றிவருவது வேதனையளிக்கின்றது.படிப்பறிவு இருந்தால் மட்டுமே நூலகம் பயன்படும். கண்களை பிடுங்கிவிட்டு கண்ணாடி வழங்கும் முயற்சியாக உள்ளது.ஒரு மாணவர் கூட இல்லையென்று அரசுபள்ளிகளை மூடுவது ஒருபுறம் இருக்க சேர்ந்த மாணவனை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அப்பள்ளியினை மூடிட அதிகாரிகள் வேகம் காட்டுவது எதிர்காலத்தில் அரசுபள்ளிகளை முழுமையாகி மூடடுவிழா நடந்திடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


 அதற்கு சான்றாக திருப்பூர் கல்வி மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெரியநாதபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்ந்துள்ள  ரோகித் என்ற மாணவனுக்கு சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பிட  மாணவனின் தந்தை சிட்டிபாபு வை அழைத்து டி சி வாங்கிச்செல்ல தலைமையாசிரியர் புஷ்பலதா மூலம் வற்புறுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இதனை எதிர்த்து கிராம மக்கள் ஒன்று திரட்டி மாணவனின் தந்தை சிட்டிபாபு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுவும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது..தலைமையாசிரியரை அருகிலுள்ள கருவலூர் என்ற அரசுபள்ளிக்கு பணிமாற்றம் செய்துவிட்டு, 60 ஆண்டுகளாக இயங்கிவந்த பள்ளிகூடத்தை படிக்கவந்த மாணவனை வெளியேற்றிவிட்டு பள்ளியினை மூடும் முயற்சி வருத்தமளிக்கிறது.

ஒரு மாணவனாக இருந்தாலும் கல்வி அளிப்பது அரசின்கடமை.மேலும் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க அரசு பள்ளிகளை காப்பாற்றி பள்ளியினை தொடர்ந்து நடத்திட  நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாண்புமிகு.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். இப்படிக்கு 
பி.கே.இளமாறன்
.மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!