#BREAKING நாளை முதல் அரசு ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு... வெளியானது அரசாணை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 5, 2021, 4:09 PM IST
Highlights

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

​தமிழகத்தைப் பொறுத்தவரை தீயாய் பரவி கொரோனா 2வது அலையை சமாளிப்பதற்காக மே 1ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  தமிழக அரசு வரும் நாளை 6-ம் தேதி காலை 4 மணி முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.

மளிகை கடைகள், பலசரக்கு கடைகள் ஆகியன 12 மணி வரை மட்டுமே இயக்கலாம். அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் 12 மணிவரை செயல்படலாம். உணவகங்கள், தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

​இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் படி நாளை முதல் மே 20ம் தேதி வரை 50 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்றும், மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் அல்லது வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் குரூப் ஏ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் தேவையின் அடிப்படையில் பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என்றும், அனுமதியின்றி வெளி மாவட்டத்திற்கு செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

click me!