இந்த 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி... திருமணத்திற்கு செல்ல இ-பதிவும் தேவையில்லை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 25, 2021, 07:43 PM IST
இந்த 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி... திருமணத்திற்கு செல்ல இ-பதிவும் தேவையில்லை...!

சுருக்கம்

வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ-பதிவு தேவையில்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்த வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களுக்கான பொது போக்குவரத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த முறையை வகை 2ல் உள்ள மாவட்டங்களுக்கு கூடுதலாக பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ-பதிவு தேவையில்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

வகை - 2 மற்றும் 3-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

• தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (flousekeeping) இ பதிவில்லாமல் செயல்பட அனுமதி.

• மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ - பதிவில்லாமல் அனுமதி. 


• அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

• வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தானியங்கி பணம் வழங்கும் (ATM) சேவைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. 

• இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் அதன் செயல்பாடுகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. இதர தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் அனுமதி. .

• தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. 


• வீட்டு வசதி நிறுவனம் (HFCS) வங்கி நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. 


• உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், குளிர் சாதன வசதி இல்லாமல், ஒரே நேரத்தில் 50% நபர்களுடன் உட்பட்டு முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு வழக்கமாக அனுமதி.

• அருங்காட்சியகங்கள். தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள். அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.

• தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. 

• அனைத்து கடற்கரைகளிலும், காலை 5 மணி முதல் காலை 9.00 மணி வரை நடை பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும். 

திருமணங்களுக்கான பயண அனுமதி

• வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.

வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்கிடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படும். இதற்கான இபாஸ் திருமணம் நடைபெற மாவட்டத்தின் மாவட்ட உள்ள ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https:/eregister.tnega.org) மணமகன் மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் வகை-1ல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-2. 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ பாஸ் பெறவேண்டும்

•  திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

• நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி என குறிப்பிடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை
வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி