#BREAKING இந்தியாவில் வேகமெடுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ்.. தமிழகத்தில் 9 பேருக்கு வைரஸ் உறுதி..!

By vinoth kumarFirst Published Jun 25, 2021, 6:50 PM IST
Highlights

இந்தியாவில் 48 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில், தமிழகத்தில் 9 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் 48 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில், தமிழகத்தில் 9 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

டெல்டா வகை வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் 2வது அலைக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதன் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, மத்திய  பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவி வருகிறது.  

இந்நிலையில், டெல்லியில் நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய கட்டுப்பாட்டு அறை இயக்குநர் டாக்டர் எஸ்.கே.சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தற்போது நிலவரப்படி  இந்தியாவில்  டெல்டா பிளஸ் வைரஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 20 பேர், தமிழகத்தில் 9 , மத்திய  பிரதேசத்தில் 7, பஞ்சாப், குஜராத்தில் தலா 2, கேரளாவில் 3, கர்நாடகா, ஜம்மு, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திராவில் தலா ஒருவர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா கூறுகையில்;- கர்ப்பணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அவர்களுக்க பயனுள்ளதாக இருக்கும் என்பதால், அவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.உருமாறிய கோவிட் வகைகளான ஆல்பா, பீட்டா, காமா ஆகியவற்றிற்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செயல்படுகின்றன. டெல்டா பிளஸ் வகை தற்போது 12 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்தியாவில் 48 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக, பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தனிமைபடுத்தப்பட்டனர் என்றார்.

click me!