2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புக்கு முன்னதாக மாநில அரசுகளுடன் ஆலோசித்திருக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுகின்றன. அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது. அதே வேலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். ஆனால் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அதிகம் இருப்பு வைத்துள்ள நபர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், மத்திய அரசு இது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் போது மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
சொந்த தொகுதியில் நின்று டெபாசிட் வாங்க முடியுமா? காமராஜ்க்கு வைத்திலிங்கம் சவால்
இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதே போன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.