மிஸ்டர் எடப்பாடி...ஒத்த கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியுமா...!

By Asianet TamilFirst Published Aug 14, 2019, 12:56 PM IST
Highlights

கம்பராமாயணத்தை யார் எழுதினார் என்று கூட தெரியாமல் பேசும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஐநா மன்றம் சிதம்பரத்தை பாராட்டியிருப்பதைப்பற்றி கேட்டால் தெரியவாப் போகிறது

கம்பராமாயணத்தை எழுதியவர் யார் என்று  கூட தெரியாத அறிவுஜீவி தான் எடப்பாடி பழனிச்சாமி என கூறியதுடன், அவருக்கொல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிலைமை எங்களுக்கு என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி கடிந்துகொண்டுள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரத்தை பூமிக்கு பாரம் என்றும், அவர் பதவியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தார் என்றும் பேசியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கே.எஸ்.அழகிரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் பா.சிதம்பரம், அவர் கொண்டுவந்த தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் மூலம் இந்தியா பொருளாதாரத்தில் மிகப் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது, அதை  ஐநா மன்றமே ஏற்றுக்கொண்டு அவரை பாராட்டியுள்ளது என்றார். கம்பராமாயணத்தை யார் எழுதினார் என்று கூட தெரியாமல் பேசும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஐநா மன்றம் சிதம்பரத்தை பாராட்டியிருப்பதைப்பற்றி கேட்டால் தெரியவாப் போகிறது என்று முதலமைச்சரை நையாண்டி செய்துள்ளார் அழகிரி.

காமராஜர் காலத்தில் தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை திறந்து, இலவச மத்திய உணவு திட்டத்தை அறிவித்து  கல்விபுரட்சி ஏற்படுத்தினார்,அதுவும் காமராஜர் தமிழகத்தில் மட்டும்தான் செய்தார், ஆனால் பா.சிதம்பரம்  நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சுமார் 12 கோடி மாணவர்கள் பயன்யடையும் வகையில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த நிதி வழங்கியவர் என்றார்,  இந்தியாவில் இத்தனை கோடிபேர் உயர்கல்வி பயின்றுள்ளனர் என்றால் அதற்கு முக்கிய காரணம் கல்விக்கடன் என்ற மகத்தான திட்டம் தான், நாட்டில் கல்விக்கடன் பெற்ற 5 பேரில் தமிழகத்தைச்சேர்ந்த ஓரு மாணவர்  பல லடசம் மாணவர்கள் கல்விக்கடனால் பயனடைந்துள்ளனர். சிதம்பரம் கொண்டுவந்த மக்கள் நல திட்டங்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம் என்று கூறிய கே.எஸ். அழகிரி தமிழகத்தின் அடையாளமாக, நாடு போற்றும் பொருளாதார ஆளுமையாக உள்ள, சித்பரத்தைப்பார்த்து பூமிக்கு பாரம் என்று பழனிச்சாமி போசியிருப்பது அவரது அறியாமைமையை காட்டுகிறது என்றார்.

click me!