ஏர் கூலர் + அரை நாள் போராட்டம்.. ஜெயலலிதா சர்ச்சை முடிவதற்குள் கருணாநிதியை வம்புக்கு இழுத்த அண்ணாமலை

By Raghupati R  |  First Published Jun 12, 2023, 8:40 PM IST

ரூ.40,000 கோடி டாஸ்மாக் மூலம் வருமானம் வருகிறது என்றால் அரசு அவமானப்பட வேண்டும். 2004 முதல் 2009 வரை டி.ஆர் பாலு மத்திய அமைச்சரவையில் இல்லை. எல்லாத்துக்கும் ஊழல் தான் காரணம் என்று பேசியுள்ளார் அண்ணாமலை.


கிருஷ்ணகிரி ஓசூர் ராம்நகரில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “சுதந்திரத்துக்கு பிறகு பிரதமர் மோடியின் அரசு 9 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 10 ஆண்டுகளை தொட்டுள்ளது.

தமிழக செங்கோலுக்கு பிரதமர் மோடி அங்கீகாரம் கொடுத்தார். ஆயிரம் ஆண்டுகளில் கிடைக்காத அங்கீகாரம் இது. திருக்குறளை 23 மொழிகளில் மத்திய அரசு மொழிப்பெயர்த்துள்ளது. ரூ.40,000 கோடி டாஸ்மாக் மூலம் வருமானம் வருகிறது என்றால் அரசு அவமானப்பட வேண்டும். 2004 முதல் 2009 வரை டி.ஆர் பாலு மத்திய அமைச்சரவையில் இல்லை. எல்லாத்துக்கும் ஊழல் தான் காரணம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்! அதிமுக - பாஜக ஷாக் !!

9 ஆண்டுகளில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய பல திட்டங்களை பாஜக செய்துள்ளது. தமிழ்நாட்டில் 1.41 கோடி பேர் மத்திய அரசு மூலம் இலவச வங்கி கடன் பெற்று பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பயனடைவதால் திமுக பாஜகவை குறைகூறி வருகிறது. 10 ஆண்டுகாலம் திமுக - காங்கிரஸ் கட்சி பல்வேறு சாதனைகளை செய்தனர்.

மீத்தேன் திட்டம், சேது சமுத்திர திட்டம் என திமுகவை சேர்ந்த கனிமொழி, டி.ஆர் பாலுவுக்கு ஆதரவான திட்டங்களை தீட்டினர்.இலங்கைக்கும், சென்னைக்கும் வான்வழி போக்குவரத்து, கடல் வழி போக்குவரத்து செயல்படுத்தி உள்ளது மத்திய அரசு. ஏர் கூலரை ஆன் செய்து அரை நாள் போராட்டம் கிடந்தனர் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இலங்கை போருக்கு காரணம் முதல் குற்றவாளி திமுக. இரண்டு காங்கிரஸ் கட்சி. மூன்றுதான் இலங்கை அரசு. பாஜகவை பார்த்து திமுக பயப்படுகிறது திமுகவுக்கும், பாஜகவுக்கும் நடைபெற்று வரும் யுத்தத்தில் பாஜக வெற்றி பெறும். டாஸ்மாக் இழுத்து மூடாமல் இருக்கிறது திமுக அரசு.

கள்ளச்சாராய உயிரிழப்பு என்று சொல்ல கூடாது, அது கொலைதான். இதில் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின். இரண்டாவது குற்றவாளி செந்தில் பாலாஜி. டாஸ்மாக்கை மூடிவிட்டு பனைமரம், தென்னை மரத்தில் இருந்து கள்ளை எடுக்க வேண்டும்” என்று பேசினார் அண்ணாமலை.

இதையும் படிங்க..வெறித்தனமாக சண்டை போட்ட திமுக கவுன்சிலர் & வார்டு செயலாளர்.. கோவையில் அதிர்ச்சி - வைரல் வீடியோ !!

click me!