யாகாவார் ஆயினும் நாகாக்க... என்ற திருக்குறளை தப்பின்றி சொல்ல முடியுமா..? மு.க. ஸ்டாலினை தாறுமாறாக கலாய்த்த தமிழக பாஜக!

By Asianet TamilFirst Published Nov 3, 2019, 10:47 PM IST
Highlights

தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ  ட்விட்டர் பதிவில் இதுதொடர்பாக பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், திருவள்ளுவர் காவி நிற உடை, விபூதி, குங்குமத்துடன் உள்ள புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தது. இது சமூக ஊடகத்தில் பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. திமுக உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு கட்சிகள் திருவள்ளுவரை காவி உடையில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

 'யாகாவார் ஆயினும் நாகாக்க...’ என்ற திருக்குறளை இருமுறை தவறின்றி உச்சரிக்க முடியுமா திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தமிழக பாஜக தாறுமாறாக விமர்சனம் செய்துள்ளது. 
தாய்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். இதுகுறித்த தகவலை பிரதமர் மோடி தமிழில் ட்விட்டரில் வெளியிட்டார். இந்நிலையில்  தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ  ட்விட்டர் பதிவில் இதுதொடர்பாக பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், திருவள்ளுவர் காவி நிற உடை, விபூதி, குங்குமத்துடன் உள்ள புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தது. 
இது சமூக ஊடகத்தில் பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. திமுக உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு கட்சிகள் திருவள்ளுவரை காவி உடையில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக உள்ளிட்ட சங்பரிவார்கள் அதற்கு பதிலடி தந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறளை படித்து திருந்த பாருங்கள்” எனக் காட்டமாக கூறியிருந்தார்.
மு.க. ஸ்டாலினின் இந்தப் பதிவுக்கு தமிழக பாஜக பதில் பதிவை ட்விட்டரில் உள்ளது. தமிழக பாஜகவின் ட்விட்டர் இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவில், “ ‘யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்ற குறளை பொருளுடன் தப்பின்றி, இருமுறை உச்சரித்தால், அப்பதிவை நீக்கி விடுகிறோம் மு.க. ஸ்டாலின் எனப் பதிவிட்டுள்ளது. மேலும் திராவிடமாயை, துண்டுச்சீட்டு என்ற பெயரில் ஹாஸ்டேக்கையும் பதிவில் பாஜக பகிர்ந்துள்ளது. இதை பாஜகவினர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகக்களில் ஷேர் செய்யவே மீண்டும் திமுக -பாஜகவினர் சமூக ஊடகத்தில் சடுகுடு விளையாடிவருகிறார்கள்.

click me!