தமிழனில்லாத ரஜினி நம்மளை ஆள நினைக்கிறது அகம்பாவம்! அப்படி நடந்தால், அவர் காலடியில் நாம வாழ்றது அசிங்கம், அவலம்!: போட்டுப் பொளப்பது யார்?

By Vishnu PriyaFirst Published Nov 3, 2019, 5:55 PM IST
Highlights

ரஜினிகாந்தின் மிகப்பெரிய வெற்றியே, அவர் அரசியலுக்கு வராத நிலையிலும் அவரை சுற்றியே அரசியல்  பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதுதான். அது போக அவர் அரசியலுக்கு வருவதை எதிர்க்கும் நபர்களும், சதா சர்வ காலமும் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதும்தான். 

ரஜினிகாந்தின் மிகப்பெரிய வெற்றியே, அவர் அரசியலுக்கு வராத நிலையிலும் அவரை சுற்றியே அரசியல்  பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதுதான். அது போக அவர் அரசியலுக்கு வருவதை எதிர்க்கும் நபர்களும், சதா சர்வ காலமும் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதும்தான். தமிழகத்தில் அரசியலில் ரஜினி ஈடுபடு இருப்பதையும் , வென்று முதல்வராக நினைப்பதையும் எதிர்க்கும் முக்கிய நபர்களாக சீமான், கெளதமன், தனியரசு போன்றோர் இருக்கிறார்கள். இவர்களில் மற்ற இருவரையும் தவிர தனியரசுதான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரஜினியை போட்டு தாளித்து தட்டுகிறார். 
சமீபத்தில் முழு மூச்சாக ரஜினிக்கு எதிராக இவர் பொங்கியிருப்பதில் முதல் பார்ட்டை நேற்று பார்த்தோம், அதன் இரண்டாம் பகுதி இன்று, இதோ!

ரஜினிக்கு எதிராக தனியரசு  விட்டு விளாசியிருப்பதில் ஹைலைட் பாயிண்ட்கள் பின்வருகின்றன....
*    தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் அம்மாநிலத்தை ஆள முடியாது. ஆனால் நாம்தான் வந்தாரையெல்லாம் வாழ வைக்கிறோம், ஆளவும் வைக்கிறோம். 

*    தமிழகத்தை ரஜினி ஆள நினைப்பது அவர் செய்யும் மிகப்பெரிய தவறு. அப்படி ஒருவேளை அவர் ஆட்சி செய்யும் பொறுப்புக்கு வந்துவிட்டால், அவர் ஆளுகையில் வாழ்வது நமக்கு அசிங்கம், அவமானம், வரலாற்றுப் பிழை. சிலர் ரஜினி நம்மை ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது அகம்பாவமான சிந்தனை. 

*    தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன் மற்றும் பா.ஜ.க. ஆகியோர்தான் ரஜினியை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டு வரப்பார்க்கிறார்கள். தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளக்கூடாது எனும் கோட்பாட்டில் பா.ஜ.க. செயல்படுகிறது. அதன் வெளிப்பாடே இந்த செயல். வெற்றியோ, தோல்வியோ வாருங்கள், வாருங்கள்! என்று ரஜினியை இழுக்கிறது பா.ஜ.க. 

*    ஆனால் ரஜினி புத்திசாலி! தான் களமிறங்கினாலும், வெற்றி பெற முடியாதென்பது அவருக்கு தெரியும். அதனால்தான் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். 

*    பரட்டை, சப்பாணியாக நடித்தவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிடுவார்களாம். இதில் பரட்டை முதலமைச்சர் ஆவாராம். சப்பாணியோ எதிர்க்கட்சி தலைவராக ஆவாராம். இதையெல்லாம் நாங்க பார்த்துட்டு, ச்சும்மா போராடிட்டே இருக்கணுமாம். 

*    ஆனால் இதில் கொடுமை என்னான்னா, இதையெல்லாம் புரிந்து கொள்ளும் பக்குவம் நம்ம மக்களுக்கு இன்னும் வரவில்லை என்பதுதான். நீட், விலைவாசி உயர்வுக்கு போராடதவன், தன் தலைவனின் படம் ரிலீஸாக தாமதமாவதால் மறியல் செய்கிறான். விளங்குமா தமிழகம்? இதனால்தான் படமே பார்க்காதீங்கன்னு நான் பிரசாரம் பண்றேன்.............. என்று வெளுத்திருக்கிறார் மனிதர். 

ஒரு வகையில் இவர் சொல்றதெல்லாம் உண்மைதான் பா!

click me!