தமிழக ஹீரோக்கள் மோடி, எடப்பாடிக்கு பயந்து நடுங்குகிறார்கள்: சொல்றது யார் தெரியுமா?

By Vishnu PriyaFirst Published Dec 28, 2019, 6:10 PM IST
Highlights

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தி.மு..க. ஒருங்கிணைத்த பேரணியை நடிகர்கள் புறக்கணித்துள்ளனர். இது மிகப்பெரிய தவறு. மக்கள் பிரச்னைக்காக ஒரு தலைவர் அழைக்கும்போது அதை அங்கீகரித்திருக்க வேண்டும். பிரம்மாண்டமான அந்த எதிர்ப்பு பேரணியானது, நடிகர்களும் வந்திருந்தால் மெருகேறியிருக்கும்.  ஆனால் இதை சினிமா உலகம் புறக்கணித்திருப்பது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பயந்திருப்பதையே காட்டுகிறது - வாகை சந்திரசேகர் (தி.மு.க. எம்.எல்.ஏ.)

*  மக்களுக்காகப் போராடும் எதிர்க்கட்சிகள் மீது இந்த அரசு போலீஸை வைத்து வழக்குப் போட்டு முடக்கப் பார்க்கிறது. மிசாவையே பார்த்துவிட்ட தி.மு.க. இந்த வழக்குகளுக்கெல்லாம் அஞ்சாது. சட்டப்படி வழக்குகளை சந்தித்து, எங்கள் கட்சி மீது எத குற்றமுமில்லை என்பதை நிரூபிப்போம்!
- பரந்தாமன் (தி.மு.க. சட்டத்துறை இணை செயலாளர்)

*  தமிழ் சினிமா இயங்குறதே ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட சுமார் பத்து நடிகர்களின் படங்களுக்கு உள்ளேதான். ஆனால் இந்த இன் டஸ்ட்ரியானது சிறிய பட்ஜெட் படங்கள் சம்பந்தப்பட்டது. ஆனால், அந்தப் படங்களை யாரும் என்கரேஜ் பண்றதுமில்லை, கண்டுக்குறதுமில்லை. 
- பார்த்திபன் (நடிகர்)

*  நட்பு கட்சி மற்றும் கட்சித் தலைவர்களின் வலிமையைப் பொறுத்து எங்கள் கூட்டணியில் முன்னுரிமை தருகிறோம். யாரையும் எப்போதும் நாங்கள் புறக்கணிக்க நினைப்பதில்லை. அது எங்களின் நோக்கமும் இல்லை. நாங்கள் ஒரு அழைப்பிதழ் அச்சடித்தாலும் கூட அதில் காங்கிரஸ், ம.தி.மு.க., ., கம்யூனிஸ்ட்கள், முஸ்லீம் லீக், வி.சி.க என ஒரு வரிசை வைத்து அவர்களின் பெயர்களைப் போடுகிறோம். 
- டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க. எம்.பி.)

*  திருச்சி மாவட்ட தி.மு.க.வில் பல காலமாக கோலோச்சியவர் கே.என். நேரு. ஆனால் ஸ்டாலினின் நண்பர் அன்பில் பொய்யாமொழியின் மகனும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான அன்பில் மகேஷின் வருகைக்குப் பின் நேருவின் சாம்ராஜ்ஜியத்தில் விரிசல் விழ துவங்கியுள்ளது. இந்த பிரச்னையானது, நடைபெறும் உள்ளாட்சி தேர்தலின் மூலம் பட்டவர்த்தனமாகி உள்ளது. 
- பத்திரிக்கை செய்தி

*  எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சும் நபர் நானில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அத்தனை அமைச்சர்களையும் அவரவர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க சொல்லியிருக்கிறார். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட எந்த விஷயத்திலும் நான் தவறிழைக்கவில்லை. என் மாவட்டத்துக்கும், என் துறைக்கும் நேர்மையானவனாக நான் இருக்கிறேன். 
- ஓ.எஸ்.மணியன் (ஜவுளித்துறை அமைச்சர்)

*  மற்ற திருடர்கள் போல் என்னால் சுவர் ஏறிக் குதித்து வீட்டுக்குள் போய், சத்தமில்லாமல் கஷ்டப்பட்டு பீரோவை உடைத்து திருட முடியாது. அதனால்தான் எளிதாக தாலியை அறுக்கும் திருட்டை செய்கிறேன். பெண்கள் பயந்து விட்டுடுவார்கள், மேலும் தாலியில்தான் கண்டிப்பாக குறைந்தது கொஞ்சம் தங்கமாவது இருக்கும். 
- முருகன் (தாலி திருடன்)

*  எங்கள் மாவட்டத்திலுள்ள அரசு அதிகாரிகள் நல்லவர்கள். அவர்கள் ஆளுங்கட்சிக்கு பயப்படாமல், தவறுகளுக்கு பணியாமல் நேர்மையாக நடந்தால் நாங்கள் அவர்களைப் பாராட்டுவோம். எங்களுக்கு அவர்களை தெரியாதா என்ன? எங்களின் மாமன், மச்சான்கள் போலத்தான் அவர்கள். ஆனால், நேர்மையே இல்லாமல் , உள்ளாட்சி தேர்தலின் முடிவின் போது தோற்றவனை ஜெயித்தான்! என்றும், ஜெயித்தவனை தோற்றான்! என்றும்  தீர்ப்பு வழங்கினால் அதிகாரிகளே உங்களின் கை உடைபடும்
- எ.வ.வேலு (மாஜி தி.மு.க. அமைச்சர்)

*  குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தி.மு..க. ஒருங்கிணைத்த பேரணியை நடிகர்கள் புறக்கணித்துள்ளனர். இது மிகப்பெரிய தவறு. மக்கள் பிரச்னைக்காக ஒரு தலைவர் அழைக்கும்போது அதை அங்கீகரித்திருக்க வேண்டும். பிரம்மாண்டமான அந்த எதிர்ப்பு பேரணியானது, நடிகர்களும் வந்திருந்தால் மெருகேறியிருக்கும்.  ஆனால் இதை சினிமா உலகம் புறக்கணித்திருப்பது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பயந்திருப்பதையே காட்டுகிறது - வாகை சந்திரசேகர் (தி.மு.க. எம்.எல்.ஏ.)

*  ஆங்கில நாளிதழ் ஒன்றின் அலுவலகத்துக்கு பா.ம.க.வினர் சென்று வன்முறையில் ஈடுபட்டதாக தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். நடக்காத ஒன்றை வைத்து பழி சுமத்துவோரின் நெஞ்சம் முழுவதும் நஞ்சும், வஞ்சமும் நிறைந்துள்ளதை இது காட்டுகிறது  -    வழக்கறிஞர் பாலு (பா.ம.க. செய்தி தொடர்பாளர்)

click me!