இடித்து விட்டுப்போக ஈரமணல் அல்ல... எடப்பாடி வலுவான கான்கிரீட்... அன்றே சொன்ன மருது அழகுராஜ்..!

Published : Dec 28, 2019, 05:44 PM IST
இடித்து விட்டுப்போக ஈரமணல் அல்ல...  எடப்பாடி வலுவான கான்கிரீட்... அன்றே சொன்ன மருது அழகுராஜ்..!

சுருக்கம்

இடித்து விட்டுப்போக  எடப்பாடி ஈரமண் அல்ல. அவர் வலுவான கான்கீரட் கட்டடம என ஆரம்பகாலத்தில் இருந்தே தான் சொல்லி வருவதாகவும் அதனை எடப்பாடி நிரூபித்து விட்டார் என்றும் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகு ராஜ் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற ஆரம்ப காலத்தில் அதிமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றவர் மருது அழகுராஜ். அப்போது எடப்பாடி பழனிசாமி அரசு ஓரிரு மாதங்களில் கவிழ்ந்து விடும் என பலரும் கணித்து வந்தனர். ஆனால் அப்போதே மருது அழகுராஜ், இடித்து விட்டுப்போக ஈரமணல் அல்ல. எடப்பாடி பழனிசாமி போகபோக கான்கிரீட் கட்டடமாகி விடுவார்’ என அப்போதே கணித்துச் சொன்னார் மருது அழகு ராஜ்.

வலுவான தலைவராக மாறியதோடு மட்டுமல்லாமல் நிர்வாகத்தில் இந்திய அளவில் தமிழகத்தை முதலிடத்துக்கும் கொண்டு வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.  டி.வி.விவாத மேடைகளில் அதிமுக சார்பாக பங்கேற்கும் மருது அழகுராஜ் அதிமுக  செய்தி தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மை காலமாக அதிமுக மேடைகளிலும் மருது அழகுராஜை பார்க்க முடிகிறது. அதிமுக மேடைகளில் அவரை முகம் காட்டச்செய்வது, சட்டமன்ற தேர்தலில் அவரை வேட்பாளருக்கும் திட்டத்தின் முதல்படி என்கிறார்கள் லாயிட்ஸ்  சாலை வட்டாரத்தில்..

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!