இவர்களை வெச்சு நாம என்ன சாதிக்கப்போறோம்?: வாசனை வெறுப்பேற்றி வெளிரவைத்த ஆளுங்கட்சி அலப்பறை!

By Vishnu PriyaFirst Published Mar 13, 2019, 6:46 PM IST
Highlights

’அம்புட்டுதான்’ என்று கூட்டணி கதவை இழுத்து விட்டு அறிவாலயத்தினுள் உட்கார்ந்து, யார் யாருக்கு என்னென்ன தொகுதி? எங்கே யாரை நிறுத்துவது? என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க. தே.மு.தி.க.வே தேடி வந்தபோதும் கூட ‘எல்லாம் முடிஞ்சுடுச்சு. போங்க போங்க.’ என்று வெறும்கையோடு திருப்பி அனுப்பிவிட்டனர்.
 

’அம்புட்டுதான்’ என்று கூட்டணி கதவை இழுத்து விட்டு அறிவாலயத்தினுள் உட்கார்ந்து, யார் யாருக்கு என்னென்ன தொகுதி? எங்கே யாரை நிறுத்துவது? என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க. தே.மு.தி.க.வே தேடி வந்தபோதும் கூட ‘எல்லாம் முடிஞ்சுடுச்சு. போங்க போங்க.’ என்று வெறும்கையோடு திருப்பி அனுப்பிவிட்டனர்.
 
ஆனால் எல்லோருக்கும் முன்பே கூட்டணி வேலையை துவக்கி, பா.ம.க.வுக்கு 7 இடம் ஒதுக்கி அறிவித்து அதிரடி செய்த அ.தி.மு.க.வோ இதோ இன்று வரை கூட்டணியில் ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறது. கட்டக் கடைசியாக அங்கே வாசன் சேருகிறார்! 

நேற்று வரையில் வாசன் மற்றும் ஞானதேசிகனோடு வேலுமணி, தங்கமணி ஆகிய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். இந்நிலையில், பேச்சுவார்த்தை நடந்தபோது வெளியே அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவர் அடித்த கமெண்ட் வாசனின் காதுகளுக்கு போக, அவர் முகம் வெளிறிவிட்டதாக உறுதியான தகவல்.
 
அப்படியென்ன சொன்னாராம் அந்த நிர்வாகி...
”அந்த நிர்வாகி யதார்த்தத்தைத்தான் சொன்னார். ஆனால் எவ்வளவோ உச்சத்தில் இருந்த தன்னோட நிலைமை இப்படி ஆகிடுச்சே, கிங் மேக்கரா இருந்த ஜி.கே.மூப்பனாரோட மகனான தனக்கா இந்த நிலை! என்பதுதான் வாசனோட வேதனையே. 

அந்த அ.தி.மு.க. நிர்வாகி ’எங்ககிட்ட ரெண்டு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் கேட்டு நிபந்தனை வெச்சாங்க. இவ்வளவு கேக்குறதுக்கு இவங்ககிட்ட என்ன செல்வாக்கு இருக்குது. தங்களுக்கு மக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அப்படின்னு எந்த செல்வாக்கும் இல்லைங்கிறது வாசனுக்கே நல்லாவே தெரியும். 

அதனாலதான் சமீபத்துல ஞானதேசிகன் ‘ ஏதோ ஒரு காரணத்துக்காக தன்னை விட்டு பிரிந்து போன கட்சியை மீண்டும் இணைத்துக் கொள்ளும் எண்ணம் தேசிய காங்கிரஸிடம் இல்லை. கூட்டணிக்காக யார் யாரிடமோ பேசும் அவர்கள், த.மா.கா.வை கண்டு கொள்ளாதது  வேதனை.’ அப்படின்னு ஓப்பனா பேசியிருந்தார். இந்த புலம்பலுக்கு இன்னொரு பெயரா ‘எங்களை மறுபடியும் சேர்த்துக்கோங்க. எங்களால தனியா கட்சி நடத்த முடியலை. அரசியல்ல இருந்து காணாமலே போயிடுவோம் போலிருக்குது.’ அப்படின்னு ராகுல் காலை பிடிச்சுக்கிட்டு கதறும் செயல். இப்படி பண்ணிக் கொண்டே எங்க கட்சியில் கூட்டணியும் பேசுறாங்க. ஆக, காங்கிரஸ் ஏற்றுக் கொண்டால் தி.மு.க.வின் கூட்டணி மேடையில்  போய் நிற்க தயங்காத த.மா.கா.வை நாங்க வெச்சுக்கிட்டு என்னத்த சாதிக்கப்போறோம்? வீண் சுமைதான். இவங்களால எந்த அரசியல் லாபமும் கிடையாது.” அப்படின்னு பேசிட்டார். இதுதான் அங்கே நின்னுட்டு இருந்த த.மா.கா. புள்ளிகள் சிலர் மூலமா வாசனோட கவனத்துக்கு போயிடுச்சு. அவரும் முகம் வெளிறிட்டார்.” என்கிறார்கள். 
கப்பல் போக்குவரத்து துறையின் தேசிய அமைச்சராய் இருந்தவரின் மரியாதை இப்படியா கப்பல் ஏறணும்?

click me!