அமேசான் காட்டிலும் கமல்ஹாசன் பிரசாரம்... அந்தமானை தொடர்ந்து நம்மவருக்கு வரும் கன்னாபின்னா அழைப்புகள்..!

By Vishnu PriyaFirst Published Mar 26, 2019, 3:27 PM IST
Highlights

அந்தமான் - நிகோபர் லோக்சபா தொகுதிக்கான தேர்தலில், திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக பெருமைப்படுகிறேன். இந்த கூட்டணி, எதிர்காலத்திலும் தொடர வேண்டும்! என்பதே என் விருப்பம்

* கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவான அலை வீசியது, ஆனால் இப்போது எதிர்ப்பலை வீசுகிறது. மத்திய மற்றும் மாநிலத்தை ஆளும் இரண்டு கட்சிகளும் தேர்தலில் முறைகேடுகள் செய்திட அதிக வாய்ப்புள்ளது: திருமாவளவன். (என்ன தல, திடீர்ன்னு அலை, கிளைன்னு பேச ஆரம்பிச்சிட்டீங்க? போன தபா அலை இருந்த நேரத்துல தமிழ்நாட்டுல பி.ஜே.பி. ஜெயிக்கல. இந்தவாட்டி அலை இல்லாத சூழல்ல, ரிவர்ஸாகி ஒருவேளை அவங்க ஜெயிச்சுட்டா, தி.மு.க. கூட்டணிக்கு ரிவிட்டுதானே?)

* தேர்தல் ஆணையமானது உண்மையாகவும், நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் செயல்பட வேண்டிய அமைப்பு. ஆனால் அதன் செயல்பாடுகளோ நம்பகதன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளன: முத்தரசன். (கம்யூனிஸ்டுகளும் கூடத்தான் பதவிக்காம அலையாத, அதிகாரத்துக்காக அலையாத, ஊழல் கட்சிகளுடன் கைகோர்க்காத மக்கள் நல இயக்கங்கள் அப்படின்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. ஆனா நீங்க அதையெல்லாம் இப்ப ஃபாலோ பண்ணிட்டா இருக்கீங்க? முதல்ல உங்க கையை பாருங்க தோழர்)

* ஈரோடு அல்லது திருப்பூரில் போட்டியிட விரும்பினேன். ஆனால் அவற்றை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிவிட்டதால், தேனியில் போட்டியிட தலைமை கேட்டுக் கொண்டது, வந்துவிட்டேன்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். (வெற்றி வாய்ப்பு இருக்குதா, இல்லையான்னு பார்க்காமல் தலைமை உத்தரவை மதிக்கிற உங்களோட கடமை உணர்ச்சியை பார்த்து கம்பெனி பாராட்டுது. அதேநேரத்துல ‘ஒரே தொகுதியில தொடர்ந்து தோக்குறதுக்கு அவருக்கும் போரடிக்காதா? இந்த வாட்டி ஒரு மாற்றத்துக்கு தேனி மக்கள் கையால அவர் தோக்கட்டுமே’ அப்படின்னு உங்க கட்சியின் எதிர்கோஷ்டி போடுற எகதாளம் கேட்குதா? இளங்கோ சார்!)

* தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க.வினர் எங்களுடன் இணைவர், நாங்கள் எந்த காலத்திலும் அவர்களுடன் இணையமாட்டோம். அ.தி.மு.க.வுடன் இணைவதை விட கடலில் குதிப்பது மேல்: தினகரன். (அண்ணே, பீர்ல பாலை ஊத்தினாலும், பால்ல பீரை ஊத்தினாலும் கெட்டுப் போகப்போறதென்னவோ பால்தானேண்ணே? நீங்க அங்குட்டு கலந்தா என்ன, இல்ல அவிய்ங்க இங்கிட்டு கலந்தாயென்ன? எல்லாம் ஒரே குட்டைதான், மட்டைதான்னு எதிர்கட்சிக்காரய்ங்க எக்குத்தப்பா கிண்டுறாய்ங்க.)

* அந்தமான் - நிகோபர் லோக்சபா தொகுதிக்கான தேர்தலில், திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக பெருமைப்படுகிறேன். இந்த கூட்டணி, எதிர்காலத்திலும் தொடர வேண்டும்! என்பதே என் விருப்பம்: கமல்ஹாசன். (ஒலகம், அந்தமான் வரைக்கும் வந்ததே அந்துட்டீங்க. அப்படியே ஆறு, மலை கடந்து அமேசான்  காடு வரைக்கும் வந்துட்டு போயிடுங்க. அதிபர் கிம்மாசோவ்  கிக்காயிக்கு ஆதரவா ரெண்டு வார்த்த பிரசாரம் பண்ணினீங்கன்னா, அவரு ஜெயிச்சுடுவாரு. வர்றீயலா?)

click me!