சைலண்டாக திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி... தலைமை அதிரடி நடவடிக்கை..!

By vinoth kumarFirst Published Feb 11, 2021, 5:11 PM IST
Highlights

திருவண்ணாமலை திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளரான சவால்பூண்டி சுந்தரேசன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது. 

திருவண்ணாமலை திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளரான சவால்பூண்டி சுந்தரேசன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது. 

திருவண்ணாமலை திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளரான சவால்பூண்டி சுந்தரேசன், அக்கட்சி நிர்வாகி ஒருவரிடம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குறித்து பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை ஒருமையில் அவன், இவன் என்று கண்டபடி கடுமையாக விமர்சித்துப் சுந்தரேசன் பேசியிருக்கிறார். 

மேடையில் எ.வ.வேலு, என் பெயரைச் சொன்னால் ஜால்ரா பசங்க எவனும் கைத்தட்ட மாட்டேங்கறானுங்க. எ.வ.வேலுவின் பையன் கம்பன் கட்சியில் வந்து எதையும் புடுங்கலை. அப்பன் நிழல்ல இருக்கிற அவனுடைய பெயரைச் சொன்னால் கைதட்டுறானுங்க. பள்ளிக்கூடம், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ-னு எட்டு கல்லூரிகள் நடத்துகிறார் எ.வ.வேலு. மருத்துவக் கல்லூரியும் கட்டிவருகிறார். தமிழ்நாடு முழுவதும் 6,000 ஏக்கர் நிலம் இருக்கிறது. இங்கு கட்சித் தொண்டன் கொடி எடுத்து ஓடுறான், குதிக்கிறான், ரத்தம் சிந்துறான், ஒரு பொறுப்புக்குக்கூட வராமல் அப்படியே செத்துப்போறான்.

வேலு மகன் கட்சிக்கு வரட்டும். வேணாம்னு சொல்லலை. அந்த நாற்காலியில இன்னிக்கே போய் உட்காரணுமா? ஏதாவது கல்லூரி நிர்வாகத்தைப் பார்க்கட்டும். அப்பன் மந்திரியா இருப்பாரு, மாவட்டச் செயலாளராக இருப்பாரு. அப்புறம் நீ வருவ. கருணாநிதி புள்ளைக்கும் சேர்த்துதான் சொல்றேன். பொழப்பைக் கெடுக்கிறானுங்க. ரத்தம் சிந்தி சிறைக்குச் சென்றவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்க மாட்டானுங்க. இது கட்சியா இல்லை அடிமைச் சாசனமா எழுதி கொடுத்துட்டோமா? என பேசியது வைரலானது. 

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சாவல்பூண்டி சுந்தரேசனை கட்சியிலிருந்து ஓரங்கட்ட முடிவு செய்தார். மேலும், சாவல்பூண்டி சுந்தரேசன் கூறியிருந்த சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளையும் எ.வ.வேலு மறுத்து பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில்,  திருவண்ணாமலை திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளரான சவால்பூண்டி சுந்தரேசன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

 68 வயதாகும் சவால்பூண்டி சுந்தரேசன் 28 வயதுடைய அபிதா என்ற இளம்பெண்ணைக் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!