
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து அந்தத் தொகுதியில் 6 மாதத்துக்குள் இடைத் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக தேர்ல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முன்னாய் எம்எல்ஏ எஸ்.எம்.சீனவேலு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்ல் முடிவுகள் அறிவிக்கும் முன்னரே எஸ்.எம்.சீனவேலு, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் அந்தத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஏ.கே.போஸ், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் ஏ.கே.போஸ் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மட்டும் ஏன் திரும்பத் திரும்பத் தேர்தல் வருகிறது என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள்(கலெக்டர்கள்) மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குபதிவு எந்திரத்தையும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தையும் இயக்குவது குறித்த பயிற்சி கருத்தரங்கு சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு , திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து உள்ளோம் அங்கு இடைத்தேர்தல் நடத்த தயார் ஆக இருக்கிறோம். தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தவுடன் அந்த தேதியில் தேர்தல் நடத்துவோம் என தெரிவித்தார்..
தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் விடுபட்ட மற்றும் தகுதி உள்ள வாக்காளர்களை சேர்த்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.