திருப்பதி ஒன்றும் சர்ச் இல்ல... நயன்தாரா செருப்பு அணிந்த விவகாரம்.. கொந்தளித்த ராமரவிக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Jun 11, 2022, 12:25 PM IST
Highlights

நடிகை நயன்தாரா செருப்பு அணிந்து செல்வதற்கு திருப்பதி ஒன்றும் சர்ச் அல்ல என இந்து தமிழ் கட்சியின் மாநில நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் விமர்சித்துள்ளார்

நடிகை நயன்தாரா செருப்பு அணிந்து செல்வதற்கு திருப்பதி ஒன்றும் சர்ச் அல்ல என இந்து தமிழ் கட்சியின் மாநில நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் விமர்சித்துள்ளார். அது நயன்தாராவாக இருந்தாலும் சரி, அவர்களுடன் சென்ற படக்குழுவினராக இருந்தாலும் சரி செருப்பு அணிந்து சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் அவரது காதலன் விக்னேஷ் சிவனுக்கும் நேற்று முன்தினம் சென்னையில் திருமணம்  நடந்தது. அதில் திரைத் துறையில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு நேற்று நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியர் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க திருமலை திருப்பதிக்கு சென்றனர். அப்போது கோவில் வளாகத்தில் அவர்கள் சாமி தரிசனம் செய்வதை வெளிநாட்டு படக்குழுவினர் படம் பிடித்தனர்.

கோவில் வளாகத்திற்குள் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்பது கோவில் நிர்வாகத்தின் கட்டளை, இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் செருப்பின்றி கோவில் வளாகத்திற்கு வருவதுதான் வழக்கம்,  ஆனால் கோவில் வளாகத்திற்குள் வெறுங்காலுடன் செல்வதற்கு நாயன்தாரா மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் கால்களில் செருப்புடனேயே கோயில் வளாகத்தில் நடந்து சென்றார். இதை அங்கிருந்த பலரும் வீடியோ எடுத்து பரப்பினர். இது தொடர்பாக வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் பல்வேறு இந்து இயக்கங்கள், அமைப்பினர் நடிகை நயன்தாராவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்துக்களை அவமதிக்கும் வகையிலும் இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையிலும், இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என நயன்தாராவை குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த செயலுக்கு விக்னேஷ் சிவன் வருத்தம் தெரிவித்து கோவில் நிர்வாகத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில்  தமிழகத்தைச் சேர்ந்த இந்து தமிழ் கட்சியின் மாநில நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளார். இது குறித்து அவர் பேசியிருப்பதாவது,  பெருமாளை வழிபட சென்றவர்களுக்கு காலில் செருப்பு எதற்கு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கூட செருப்பில்லாமல் தான் வருகிறார்கள், திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடவுளை வழிபட சென்றவர்கள் எதற்காக செருப்பு அணிந்து செல்லவேண்டும். இவர்கள் திட்டமிட்டை இப்படி செய்திருக்கிறார்கள. எனவே இவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து இவர்களை விசாரிக்க வேண்டும்.

கோடான கோடி பக்தர்கள் வெறுங்காலில் திருப்பதிக்கு நடந்து வரும் வேளையில் இவர்கள் மட்டும் செருப்பு அணிந்து சென்றதன் நோக்கம் என்ன? சினிமாக்காரர்கள் என்றால் இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? திருப்பதி தேவஸ்தானம் ஒன்றும் சார்ஜ் அல்ல நயன்தாரா செருப்பு அணிந்து செல்வதற்கு. இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்போது இந்த நடிகையை நாம் அனுமதித்தால் இன்னொரு நாளைக்கு மற்றொரு நடிகை ஷூ அணிந்து வருவார். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கோவிலுக்கு செல்கிறோம் என்றால் செருப்பணிந்து செல்லலாமா என்ற அடிப்படை அறிவு வேண்டாமா? என கடுமையாகப் பேசியுள்ளார்.  
 

click me!