தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய சூறாவளி காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

Published : Mar 19, 2021, 04:32 PM IST
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய சூறாவளி காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

சுருக்கம்

இலங்கைக்கு தென் கிழக்கே 1.5 கிலோமீட்டர் உயரம்வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 19.03.2021 மற்றும் 20.03.2021 தேதிகளில் கன்னியாகுமாரி. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

இலங்கைக்கு தென் கிழக்கே 1.5 கிலோமீட்டர் உயரம்வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 19.03.2021 மற்றும் 20.03.2021 தேதிகளில் கன்னியாகுமாரி. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது. 

21.03.2021 முதல் 23.03.2021 வரை: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40-50  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை