தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை..!! கன்னியாகுமரி, திருநெல்வேலி, மக்களே உஷார்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 27, 2020, 1:36 PM IST
Highlights

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட  வானிலையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு வங்கக்கடலில்  நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

 

மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் சிங்கம் ஒட்டி பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் ராஜபாளையம் (விருதுநகர்) 8 சென்டி மீட்டர் மழையும், ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) உத்தமபாளையம் (தேனி) மணிமுத்தாறு (திருநெல்வேலி) தலா 4 சென்டிமீட்டர் மழையும், வீரபாண்டி (தேனி) கோவில்வான்குளம் (விருதுநகர்) பிளவக்கல் (விருதுநகர்) மேல் பவானி, நீலகிரி தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

click me!