ரஜினியை அவசரமாக சந்தித்த குருமூர்த்தி... பிடிகொடுக்காத ரஜினி.. பரபர பின்னணி..!

By Asianet TamilFirst Published Nov 2, 2020, 8:49 AM IST
Highlights

இந்தச் சந்திப்பின்போது ரஜினி உறுதியாக எதையும் குருமூர்த்தியிடம் தெரிவிக்கவில்லை என்று ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களை சந்திக்காமல் அரசியலில் சாதிப்பது என்பது கடினம் என்பதை ரஜினி உணர்ந்ததாலும், அதற்கு கொரொனா தொற்று தடையாக இருப்பதையுமே ரஜினி காரணமாகக் கூறியதாகக் கூறப்படுகிறது. 

 நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்து பேசினார். 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், ரஜினி எப்போது அரசியல் கட்சித் தொடங்குவார் என்று ரஜினி ரசிகர்களும் பாஜகவினரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினி பெயரில் அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த அறிக்கையில், ரஜினியின் உடல்நிலையைக் காரணம் காட்டி, அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதாக இருந்தது.
ஆனால், இந்த அறிக்கை தன்னுடையது அல்ல என்று மறுத்த ரஜினி, அதில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதான் என்று தெரிவித்தார். ரஜினி மக்கள் மன்றத்தினருடன் கலந்துபேசி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்றும் ரஜினி தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களை சோகத்திலும் குழப்பத்திலும் தள்ளியது. இதனையடுத்து ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டுவது, போயஸ் கார்டனுக்கு வருவது என இருக்கிறார்கள்.


ரஜினி என்ற ஆயுதத்தை வைத்து திராவிட கட்சிகளை வீழ்த்திவிடுவேன் என்று பேசிக்கொண்டிருக்கும் தமிழருவி மணியனும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியை போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்து பேசினார். அதற்கு ரஜினியின் நண்பரும் புதிய நீதிக் கட்சி தலைவருமான ஏசி சண்முகமும் ரஜினியை சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஆலோசனை நடத்தினார். அப்போது ரஜினியின் உடல் நலம், தற்போதைய ட் தமிழக அரசியல் சூழல், ரஜினியின் அரசியல் செயல் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.


ஆனால், இந்தச் சந்திப்பின்போது ரஜினி உறுதியாக எதையும் குருமூர்த்தியிடம் தெரிவிக்கவில்லை என்று ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களை சந்திக்காமல் அரசியலில் சாதிப்பது என்பது கடினம் என்பதை ரஜினி உணர்ந்ததாலும், அதற்கு கொரொனா தொற்று தடையாக இருப்பதையுமே ரஜினி காரணமாகக் கூறியதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் குடும்மன்ற நிர்வாகிகளிடம் பேசிவிட்டு தன்னுடைய முடிவை அறிவிப்பதாக மட்டுமே ரஜினி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

click me!