திமுகவை நம்பி கெட்டவர்களே அதிகம், அதிமுகவை நம்பியவர்கள் கைவிட மாட்டோம்... வெளுத்து வாங்கும் அமைச்சர் ராஜூ..!

Published : Oct 09, 2020, 09:14 PM IST
திமுகவை நம்பி கெட்டவர்களே அதிகம், அதிமுகவை நம்பியவர்கள் கைவிட மாட்டோம்... வெளுத்து வாங்கும் அமைச்சர் ராஜூ..!

சுருக்கம்

திமுக ஆட்சி காலத்தில் மின்சார கம்பிகள் துவைத்த துணிகள் காய வைக்க பயன்படுத்தப்பட்டது, அதிமுக ஆட்சி காலத்தில் மட்டுமே தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் வீடு வீடாக சென்று சொல்ல வேண்டும், திமுக, அதிமுகவின் ஆட்சிக்கு பிரேக் போட வேண்டும் என நினைக்கிறது.

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு.., “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொண்டு வந்துள்ள திட்டங்கள் சாக வரம் பெற்ற திட்டங்கள், உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் கொடுக்காத திட்டமாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 54 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் மீண்டும் உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் 2 கோடி மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ்இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் மின்சார கம்பிகள் துவைத்த துணிகள் காய வைக்க பயன்படுத்தப்பட்டது, அதிமுக ஆட்சி காலத்தில் மட்டுமே தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் வீடு வீடாக சென்று சொல்ல வேண்டும், திமுக, அதிமுகவின் ஆட்சிக்கு பிரேக் போட வேண்டும் என நினைக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக பொய் சொல்லி வாக்குகளை பெற முயற்சித்து வருகிறது, திமுக ஆட்சியை பிடித்து விடலாம் என கனவில் உள்ளது, ஒ.பி.எஸ் சிரித்த முகத்துடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்து உள்ளார், அதிமுகவில் கட்சி பெரியதா?, பதவி பெரியதா.? என்றால் கட்சியும், கொள்கையும் தான் பெரியது, திமுகவில் ஸ்டாலின் நினைத்தால் மட்டுமே பதவி கிடைக்கும்., அதிமுகவில் ஜனநாயகத்தின் படி பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, திமுகவை நம்பி கெட்டவர்களே அதிகம், அதிமுகவை நம்பியவர்கள் கைவிட மாட்டோம்.”எனக் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!