சசிகலாவிடம் சரண்டர் ஆகிறவர்கள் தான் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர்..! தடதடக்கும் திமுக கொ.ப.செ ஐ.லியோனி..!

By T BalamurukanFirst Published Oct 6, 2020, 8:02 AM IST
Highlights

திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.ஒரு சாக்குக்குள் கீரி, பாம்பு, கரடி, எலி, பூனை என எல்லாவற்றையும் கட்டிவைத்துள்ள மூட்டைதான் அதிமுக மூட்டையை திறந்தால் யாரைக்கடித்து எது மேலே வருமோ அதுதான் அந்த கட்சியையே அழிக்க போகிறது, அதுதான் முதல்வர் வேட்பாளராகவும் வரும் என்று நினைக்கிறேன்
 

திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.ஒரு சாக்குக்குள் கீரி, பாம்பு, கரடி, எலி, பூனை என எல்லாவற்றையும் கட்டிவைத்துள்ள மூட்டைதான் அதிமுக மூட்டையை திறந்தால் யாரைக்கடித்து எது மேலே வருமோ அதுதான் அந்த கட்சியையே அழிக்க போகிறது, அதுதான் முதல்வர் வேட்பாளராகவும் வரும் என்று நினைக்கிறேன்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ. லியோனி, “ஏற்கெனவே நாளை நமதே பாட்டை தாய் வழி வந்த தங்கள் எல்லாம் ஓர் வழி நின்றால் நாளை நமதே என ட்வீட் செய்திருந்தார். இன்று அந்த தங்கங்கள் எல்லாம் தகரங்களாக மாறிவிட்டது. அவர் சொன்ன தங்கங்களில் பாதி பெரியகுளத்திலும் மீதி சென்னையிலும்தான் உள்ளது. அந்த தங்கங்களில் எது போலி எது தங்கம் என்பது இன்னும் முடிவாகவில்லை

எது காலில் விழுந்ததோ அது நன்றாகவே விழுந்தது. எது காலில் விழுகிறதோ அதுவும் நன்றாகவே விழுகிறது. எது நாளை சின்னமா காலில் விழுகிறதோ அது நன்றாகவே விழும் இதுவே ஓ.பி.எஸின் பகவத் கீதை ட்வீட்க்கு உண்மையான அர்த்தம். விரக்தியில் இருக்கும் போதுதான் ஒரு மனிதன் பேசுவான். இந்த தத்துவங்களை எல்லாம் வாழ்க்கை முடியப்போகும் நேரத்தில்தான் பேசுவார்கள். தத்துவங்களை ஒரு மனிதன் நிறைய பேசுகிறான் எனில் வாழ்க்கையின் விளிம்பு நிலைக்கு ஒரு மனிதன் போய்விட்டான் என்றுதான் அர்த்தம். அப்படிதான் ஓ.பி.எஸ் பகவத் கீதையை மேற்கொள் காட்டி இருக்கிறார்.


அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் உட்பட எல்லோருக்குமே நாற்காலிகள் மீது ஆசை உள்ளது. என்னை பொறுத்தவரை முதல்வராக இருவருமே தகுதி இல்லாதவர்கள். சசிகலா வந்த பிறகு அவரிடம் யார் முழுமையாக சரண்டர் ஆகிறார்களோ அதன் பின் அவர்களே முழு கட்சி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, முதல்வர் வேட்பாளராகவும் வருவார்கள். ஒரு சாக்குக்குள் கீரி, பாம்பு, கரடி, எலி, பூனை என எல்லாவற்றையும் கட்டிவைத்துள்ள மூட்டைதான் அதிமுக மூட்டையை திறந்தால் யாரைக்கடித்து எது மேலே வருமோ அதுதான் அந்த கட்சியையே அழிக்க போகிறது, அதுதான் முதல்வர் வேட்பாளராகவும் வரும் என்று நினைக்கிறேன்”. 

click me!