முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் ஆலோசனை கூட்டம்.! கேள்விமேல் கேள்வி கேட்ட அமைச்சரால் பதறிய அமைச்சர் யார்.!

By T BalamurukanFirst Published Oct 5, 2020, 10:38 PM IST
Highlights

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற போட்டி களைகட்டத் தொடங்கிவிட்டது.

 

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற போட்டி களைகட்டத் தொடங்கிவிட்டது. முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து நாளை மறுநாள் அதிமுக அறிவிக்க உள்ள நிலையில் இன்று காலை திடீரென ஓபிஎஸ் அதிமுக தொண்டர்களின் நலனை கருதி தான் முடிவு எடுக்கப்படுவதாக டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதன் எதிரொலியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரிடம் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். 

அந்த ஆலோசனையின் போது அமைச்சர் உதயகுமார் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலருடன் ஓபிஎஸ்சை சந்தித்தது குறித்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. ஆலோசனையின் போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் அமைச்சர் உதயகுமாரை பார்த்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘ஏன்பா நீ எதுக்கு போய் ஓபிஎஸ்சை பார்த்த?’ என கேட்க. பதிலுக்கு அமைச்சர் உதயகுமார் ..‘ மூக்கையா தேவர் சிலை விவகாரம் தொடர்பாக பார்க்கப்போனேன்’ என பதில் கூறியிருகிறார்.  ‘அப்போ 5 எம்எல்ஏக்கள் மட்டும் ஏன் தம்பி கூட்டிட்டு போன’ என விடாப்பிடியாக திண்டுக்கல் சீனிவாசன் கேட்க. ‘அண்ணே  நான் எல்லாத்தையும் தான் கூப்பிட்டேன்’  என உதயகுமார் பதில் சொல்ல .. அருகில் இருந்த செல்லூர் ராஜீவை பார்த்து திண்டுக்கல் சீனிவாசன் ‘உங்கள அவர் கூப்பிட்டாரா?’ என கேட்க. உடனே செல்லூர் ராஜீ ‘என்னை யாரும் கூப்பிடல’  என பதில் அளிக்க உடனே உதயகுமார் பதறி போய் ‘அண்ணே நான் எப்போதும் உங்க ஆளுதான்னே’ என எடப்பாடியை பார்த்து சொன்னாராம். ‘தேவையில்லாத அரசியல் பண்ணாதீங்க தம்பி’ என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  முன்னிலையில் உதயகுமாரை திண்டுக்கல் சீனிவாசன் வெளுத்து வாங்கியிருக்கிறார். 

click me!