கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.. மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2022, 4:38 PM IST
Highlights

ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் ஆனால் மின்கட்டணம் திட்டமிட்டு அரசியலாக்கடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் ஆனால் மின்கட்டணம் திட்டமிட்டு அரசியலாக்கடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது, அதில் பெரும்பாலான திட்டங்களை மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர் ஆனால் சமீபத்தில் மின்சார துறை சார்பில் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன,

இதேபோல் எதிர்க்கட்சிகள் மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில்  கோவை மாநிகராட்சி, மேட்டுப்பாளையம், மதுக்கரை நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்கள் :  குரு மூர்திக்கு ஒரு நீதி, சவுக்குக்கு ஒரு நீதியா? நீதிபதிகள் நீதி வழுவா பாண்டிய நெடுஞ்செழியர்களா? சீமான்.

காலை உணவாக கேசரி, ரவா உப்புமா, சாம்பார் வழங்கப்பட்டது,  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் இன்று கோவையில் துவங்கப்பட்டது. வீட்டில் சாப்பிடும் உணவைப் போலவே இருக்கிறது என குழந்தைகள்  மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். கடந்த ஆட்சியின் போது பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவில்லை, இது முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், ஒரு கோடி ரூபாய் சாலை சீரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  கவனத்திற்கு !! 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு.. விவரம் உள்ளே..

125 சாலைகளுக்கு 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே வரும் மார்ச் மாதத்திற்குள் மொத்த நிதி 200 கோடி ரூபாயும் வழங்கப்படும் என்றார். கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக 127 கோடி ரூபாய்க்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது என்றார், அப்போது மின் கட்டணம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்கட்டண மாற்றம் விளக்கம் தெளிவான ஒப்பீடுகளுடன் அனைவருக்கும் புரியும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

2010ஆம் ஆண்டு தமிழக மக்கள் எவ்வளவு மின் கட்டணம் செலுத்தினார்கள், அது 2017இல் அதிமுக ஆட்சியில் எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டது. மற்றும் 2022 ஆம் ஆண்டு மாற்றி அமைக்க மின் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மின் கட்டண விவகாரம் திட்டமிட்டு அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது, மாநிலங்களிடையே தமிழகத்தின்தான் மின் கட்டணம் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, விசைத்தறிகளுக்கு இந்தியாவிலேயே குறைந்த மின் கட்டணம் தமிழகத்தில்தான் விதிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.  

இழுத்து மூட வேண்டிய நிலையில் இருந்தார் மின்சார வாரியத்திற்கு அரசு மானியம் ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தத்தில் 25 விழுக்காடு  மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது, மற்றவை வெளியில் இருந்து தான் வாங்குகிறோம்  என்றார்,  திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது, கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம், தற்போது அது நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார். 
 

click me!