மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுத்த அந்த 2 முடிவுகள்...! தடபுடலாக களமிறங்கும் டிடிவி...!

First Published Nov 27, 2017, 9:22 PM IST
Highlights
Those 2 decisions taken by the District Secretaries meeting


டிடிவி தினகரன் வரும் நவம்பர் 29 ஆம் தேதி பெங்களூரில் சசிகலாவை சந்தித்து விட்டு டிசம்பர் 1 ஆம் தேதி ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற டிடிவி தினகரனுக்கும் எடப்பாடிக்கும் ஏகாப்பொருத்தம்தான். 

இதனால் டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சுடன் கைகோர்த்தார் எடப்பாடி. இதனால் எடப்பாடி டீமை விட்டு சில எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் வெளியேறினர். 

ஆனால் எடப்பாடி அணியே வெற்றி பெற்று இரட்டை இலையை கைப்பற்றியுள்ளது. இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் டிடிவி தினகரன் களமிறங்க உள்ளார். எடப்பாடி தரப்பில் இன்னும் யார் என்று முடிவாகவில்லை. 

இந்நிலையில், பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனும் அமைச்சர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.பிக்களான நவநீத கிருஷ்ணன், விஜிலா, கோகுல கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  

இதனால் மீண்டும் அணிதாவலா என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் எழுந்து அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.  

இதைதொடர்ந்து டிடிவி தினகரன் தலைமையில் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இதில், டிடிவி தினகரன் வரும் நவம்பர் 29 ஆம் தேதி பெங்களூரில் சசிகலாவை சந்தித்து விட்டு டிசம்பர் 1 ஆம் தேதி ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

click me!