உள்துறையை கையில் வச்சிக்கிட்டு கள்ளமெளனம் காப்பது ஏன்? முதல்வரை நோக்கி கொந்தளித்த கனிமொழி..!

By vinoth kumarFirst Published Jun 24, 2020, 1:43 PM IST
Highlights

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் போலீஸ் காவலில் இறந்தது தொடர்பாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர்கள் இருவர், இரண்டு போலீஸார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் உயர்நீதிமன்றம்  தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்.பி. காணொலி மூலம் மதியம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல் துறையினரின் இந்த அராஜ போக்கிற்கு ஆளுங்கட்சி தரப்பில் இதுவரை கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும், உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரும் மவுனம் காத்து வருகிறார். 

இந்நிலையில், இது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி டுவிட்டரில் பதிவில்;- சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக  தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார். 
 

click me!