தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது…தொல்.திருமாவளவன் அதிரடி பேச்சு…

 
Published : Aug 09, 2017, 08:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது…தொல்.திருமாவளவன் அதிரடி பேச்சு…

சுருக்கம்

thol.thirumavalavan press meet about BJP

மதவாத சக்திகளுக்கு தமிழக மக்கள் என்றுமே ஆதரவு தரமாட்டார்கள் என்றும், அதனால் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்றும் விடுதைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும், அதிமுக ஆட்சியை மத்தியில் ஆளும் பாஜக அரசு, தனது பிடிக்குள் வைத்துள்ளது என்றும், அதிமுகவை எண்ட்ரோலில் வைத்திருப்பதன் மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதாகவும் எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறிவருகின்றன.

இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளகளிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், ஆனால் அது பாஜகவுக்கு சாதகமாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

தமிழக மக்கள்  ஜாதி, மத அரசியலுக்கு என்றுமே இடம் தர மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மதவாத, சாதிய கட்சிகள் என்ன பாடுபட்டாலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாது என்றும், அதுவும் பாஜக தலைகீழாக நின்றாலும் இங்கு காலூன்ற முடியாது என்றும் திருமாவளவன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!