எப்போது ஓயும் இந்த அவலம்.. மூச்சுத் திணறலோடு ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நோயாளிகள்.

By Ezhilarasan BabuFirst Published May 18, 2021, 4:43 PM IST
Highlights

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறலோடு  ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறலோடு  ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவருகின்றன. 

இந்த நிலையில், மாநிலத்திலேயே மிகப் பெரிய மருத்துவமனையான சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறலோடு ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் மூவாயிரம் படுக்கைகளைக் கொண்ட அந்த மருத்துவமனையில் 1618 படுக்கைகள் கோவிட் நோயாளிகளுக்கு என ஒதுக்கப்ப ட்டுள்ளன. அவற்றில் 1250 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியைப் பெற்றுள்ளன. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து இந்த மருத்துவமனையை நோக்கி வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆம்புலன்சில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் அவதிக்கு ஆளாகி உயிரிழக்கும் சம்பவம் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.  

 

click me!