இந்த ஒரு உத்தரவு போதும்.. தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஆட்டம்

By Ezhilarasan BabuFirst Published Jul 23, 2021, 1:30 PM IST
Highlights

வருடத்திற்கு குறிப்பட்ட தொகை TURNOVER செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை எனவும்,டெண்டருக்கான தொகை கட்ட தேவையில்லை என்றும், தமிழக அரசின் STARTUP TN முகமையில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதுமானது

தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்கும் சிறுகுறு தொழில்நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சிறுகுறு தொழில் நிறுவனங்கள், புதியதாக தொழில் தொடங்கிய நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. இந்த நிலையில் சிறுகுறு தொழில்நிறுவனங்களின் பாதிப்பை சரி செய்யும் வகையில் பல்வேறு தளர்வுகள் மற்றும் சலுகைகளை வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் ரூ.20 லட்சத்திற்கு குறைவான டெண்டரில் சிறுகுறு நிறுவனங்கள் பங்கேற்கும் போது அவர்களுக்கு ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி டெண்டர் கோரும் புதியதாய் தொடங்கிய, தொடங்கவுள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் அரசு துறையில் டெண்டர் கோரும் போது முன்வைப்புத்தொகை வைக்க தேவையில்லை என்றும், வருடத்திற்கு குறிப்பட்ட தொகை TURNOVER செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை எனவும்,டெண்டருக்கான தொகை கட்ட தேவையில்லை என்றும், தமிழக அரசின் STARTUP TN முகமையில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதுமானது எனவும் உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 

click me!